பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிரியும் வையையும் ஆசி: இதோ உங்களுக்குச் சொல்லத்தான் போகி: றேன். முன் கேட்டீர்களே பாட்டு. அது. பரிபாடலில் உள்ளது. முழுக்க முழுக்க இவ். வையை பற்றியே பாடல்கள் உள்ளன. அவற்றில் அக்காலத்தில் மக்கள் வாழ்ந்த அக வாழ்வு, புற வாழ்வு இரண்டும் காட்டப்பெறு: கின்றன. மதுரையின் சிறப்பும் பரங்குன்றில் கோயில் கொண்ட இறைவன் சிறப்பும் நன்கு, பேசப்படுகின்றன. மாண: அப்படியா! ஆசி: ஆம்! மதுரையின் சிறப்பை முன் நாம் கண்ட சிலப்பதிகாரமே நன்கு காட்டுகிறது. ஊர் காண் காதை’ என்ற ஒரு தனிப் பகுதியை அமைத்து, அதில் மதுரை மாநகரைக் கோவல னுக்குக் காட்டுவது போன்று இளங்கோவடிகள் நமக்கெல்லாம் கா ட் டு கி ன் ரு ர். மற்றும். பட்டினப் பாலே பூம்புகாரின் சிறப்பை விளக் குவது போன்று மதுரைக் காஞ்சி என்பதும் இம்மதுரையின் சிறப்பை விளக்குகிறது. மாண: நாம் செய்த பேறே பேறு இந்த இலக்கி யங்கள் இன்றேல் நம் வாழ்க்கையே புரியாது. போலும். ஆசி. நன்கு சொன்னிர்கள்! உண்மையே. அவற்றின் வழி வையைக்கரை நாகரிக வாழ்வினைக் காண் போமா? மாண: ஆம்! ஆம்! காணலாம். ஆசி. வையைக் கரையில்தான் செங்தமிழ் நாட்டுத். தலைநகராகிய மதுரை இருந்தது-இருக்கிறது: இருக்கும். இந்த நாட்டில் என்றும் மழை. 17