பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்களுக்கு-வானெலியில் தவறியது இல்லையாம். எந்த இயற்கையும் மாறியதில்லையாம். மதுரைக் காஞ்சி இவை பற்றியெல்லாம் நன்கு விளக்குகிறது. மாண: ஆமாம், மழை வளம் தரும் நாடே சிறந்தது. ஆனல் தவருது பெய்ய செய்ய வேண்டும்? இது தானே தெரியவில்லை. ஆசி. நல்ல கேள்வி நாட்டில் இருப்பவர் நல்லவர் களாகவும் ஆட்சி நல்லதாகவும் இருந்தால் மழை தவருது எனப்பல பெரியோர் கூறியுள்ளார்களே. காகரிகமும் அந்த அடிப்படையில் உண்டாவது தானே! மாண: அப்படியா? அப்போது மதுரையில் நாகரிகம் வாய்ந்த நல்ல மனிதர்கள் இருந்தார்கள் என்று சொல்லுங்கள். ஆசி: நானு சொல்கிறேன்? மதுரைக் காஞ்சி பாடிய மாங்குடி மருதனரே சொல்கிருர், " பொய்யறியா வாய்மொழியால் புகழ்நிறைந்த நல்மாந்தரொடு நல்ஊழி அடிபெயர பல்வெள்ளம் மிக்கூர உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக" என்று மதுரை காட்டில் வாழ்ந்த நல்ல மக்களையும் நலம் நிறைந்த அரசையும் அவர் காட்டுகின் ருர் அல்லரோ! மாண: உணர்கிருேம் இவையெல்லாம் வையை அளித்த வளன் அல்லவா? ஆசி: உண்மை. அந்த வையை ஆற்றில் மக்கள் போக்குவரத்து மிக அதிகமாக இருந்ததாம். 18