பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிரியும் வையையும் அப்படியே மதுரையின் வாயிலிலேயும் போவோர் வருவோர் மிக அதிகமாக இருந்தார்களாம். இரண்டையும் இணைத்த மருதனர் வையை யன்ன வழக்குடை வாயில் எனப் பாராட்டு கின்ருர். மாண: ஆம்! நல்ல ஆட்சியும் நல்லவரும் தாமே நாகரிகக் கண்ணுடி. அந்த ஊரில் பலரும் வாழ விரும்ப மாட்டார்களா? ஆசி: மிகவும் விரும்பினர்கள்; அதல்ைதான் அந்த நெருக்கடியை அப்படிப் பாடுகிருர் புலவர். இன்னும் அங்த அரசர்கள் பழி ஏற்காத நல்ல வர்கள், பெரியாரைக் துணை கொண்டவர்கள். 'அரசியல் பிழையாது அறநெறி காட்டிப் பெரியோர் சென்ற அறவழி பிழையாது ஆண்ட வர்கள்; வாணன் வைத்த விழுநிதி பெறினும் பழி நமக்கு எழுக என்னது வாழ்ந்தார்கள். இந்த வாழ்வுதானே நாகரிக வாழ்வு. மேலும் அந்த நகர அமைப்புப் பற்றியும் சில கேளுங்கள். மாண: சொல்லுங்கள் ஐயா, சொல்லுங்கள். ஆசி: அம்மதுரை நகர் அகழால் சூழப்பட்டது. அதில் வெளிநாட்டவர் தங்கத் தனி இடங்களும் உள் காட்டவர் வாழிடங்களும் தனித்தனியாக இருந்தன. இறைவர் தங்கும் கோயில்கள் பல. அவற்றுள் மணி யோசை-காலை முரசொலி அனை வரையும் எழுப்பும் நல்லொலிகளாக அமைந்தன. அங்த நகரத்தில் உள்ள தெருக்கள் அழகழகாகஅணியணியாகச் சிறந்தன. ஒவ்வொரு வகை வாணிபத்துக்கும் ஒவ்வொரு தெரு, மாலேக் கடைத்தெரு போன்ற கவின் படைத்த தெருஅரசர் தெரு-அயலவர் தெரு-படையாளர் 19