பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்களுக்கு-வானெலியில் தெரு-பணியாளர் தெரு என்று எத்தனையோ வகையான .ெ த ரு க் க ள். அத்தெருக்களில் அமைந்த மாளிகைகள்தாம் எத்துணைய! கோடைக் காலத்திற் கேற்ற நிலா முற்றம் கொண்ட மேல் மாளிகை-குளிர் காலத்திற் கேற்ற சாரளம் அடைக்கத் தக்க இடைத்தளம்பலரும் கலந்து வாழும் கீழ்த்தளம். அவற்றின் சுதையொடு கூடிய அழகு படுத்தப்பெற்ற அமைப்பு. இப்படி நகரத் தெருக்களும் கல்ல வாளுேங்கிய மாளிகைகளும் பல இலக்கியங்களால் போற்றப்படுகின்றன. இத்தகைய மாளிகை. களில் நல்ல அறவோரும் அறிஞரும் வாழ்ந்து நாகரிகத்தின் சின்னங்களாக விளங்கினர். மாண: கன்ருக உணர்கிருேம் இவற்றை அறிய மிகவும் மகிழ்கின்ருேம். ஆயினும் ஓர் ஐயம். ஆசி: கன்ருகக் கேளுங்கள்! உங்கள் ஐயத்தைப் போக்கவே நான் இங்கே இருக்கிறேன். மாண: ஒன்றுமில்லை. நாகரிகம்' என்ற சொல். லுக்குப் பொருள் என்ன? ஆசி: நல்ல கேள்வி-விளக்கம் பெற வேண்டிய கேள்வி. இன்று நாகரிகம் என்ருல் எதை எதையோ எண்ணுகிருேம். புறத்தில் உடை. அ னி வ ைத யும் பிற ஆடம்பரங்களையுமே நாகரிகம் என்று நம்புகின்ற உலகம் இது. ஆனல் பொன்னியும் வையையும் கண்ட நாகரிகம் அந்த அளவோடு நின்று விடவில்லை. அவைகளுக்கு. மேலாக உள்ள அக நாகரிகமாகிய மனத்தோடு பொருந்திய நாகரிகத்தையே நமக்கு விளக்கின. 20