பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிரியும் வையையும். " பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்' என்று திருக்குறளும், நஞ்சுண்டு அமைவர் கனி நாகரிகர்’ என்று சங்க இலக்கியமும் 2000 ஆண்டு களுக்கு முன்பே நமக்கு நாகரிகம் என்ன என் பதை விளக்கிவிட்டன. உயிரினம்-சிறப்பாக மக்களினம் ஒருவரை ஒருவர் கம்பி ஒப்புர வொழுகுவதே நாகரிகம். நம்பினர் கெடுக்க மாட்டார் என்ற கம்பிக்கையிலே, உண்ட விடத் தையும் அமுதமாக்கிச் சாவாது வாழ்பவரே நாகரிகர். நாகரீகம்' என்று ரகர இகரத்தை நீட்டாது நாகரிகம் என்றே சொல்லவேண்டும். இதிலே பண்பாடு ஒழுக்கம் சான்ருண்மை’ என்ற எல்லா உண்மைகளும் அடங்குகின்றன. மக்கள் மக்களாக-ஒரு சமுதாயமாக வாழ வழி வகுப்பதுதான் இந்த நாகரிகம். எங்கெங்கோ தனித்தனியாகச் சுற்றித் திரிந்த மக்களை எல்லாம் ஓரிடத்தில்-தன் கரையில் அமரச் செய்து, வெள்ளத்தாலும் ஊற்றுப் பெருக்காலும் அவர் களுக்கு உணவுமாகி-உணவை விளக்கும் வகை யிலும் உதவி, ஆறு அன்று தொட்டு மக்கள் நாகரிகத்தை வளர்த்து வருகின்றது. ஆற்றங் கரையிலேயே மனிதன் பயிரிட கிலத்தையும் பண்பட்ட மனத்தையும் பெற்றுக் கொண் டான். அங்கேயே முதலில் காடும் நகரும் உண்டா யின. இவ்வாறு மனித சமுதாயத்தின் அடிப் படை நாகரிகமே ஆற்றங்கரையில் பிறந்தது தான். இதே நாகரிகம்தான் 50 0 ஆண்டு களுக்கு முன் சிந்து நதிக்கரையில் தோன்றி வளர்ந்தது. சீற்றமுற்ற சிந்து அதை அழித் தாலும் இன்று 5000 ஆண்டுகள் கழித்து அதன் 21 2