பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்களுக்கு-வானெலியில் தோற்றம் தோண்டக் காணப் பெற்ருேம். சிந்து நதி நாகரிகமும் பொன்னி, வையை நாக ரிகங்களும் ஒன்றேஎன்று இன்றைய ஆராய்ச்சி அறிஞர்கள் உறுதியாகக் கூறுகின்றனர். அங்கே போற்றப்பெற்ற தெய்வ நெறி தமிழகத்தில் வையைக் கரையிலும் காவிரிக் கரையிலும் இன்றும் போற்றப்பெறுகின்றன. பிற நகர் அமைப்பு முதலியனவும் அவ்வாறே. எனவே பண்டு தொட்டு வளர்ந்த ஆற்றங்கரை நாகரிகம் சிறக்கின்றது. மாண: ஆகா! நன்று! நன்று உணர்ந்தோம். இந்த வையையும் பொன்னியும் அவை போன்ற பிற ஆறுகளும் இல்லேயால்ை? ஆசி: இல்லையானல் நா. க ரி க மே-சமுதாயக் கூட்டுறவே இல்லேதான். இதில் ஐயமுண்டோ? மனித சமுதாய வாழ்வின் அடிப்படையாகிய நாகரிகப் பண்பாட்டை வளர்த்தவை இந்த ஆறுகளே ஆற்றங் கரைகளே. அதிலும் தமிழ் நாட்டுப் பொன்னியும் வையையும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இச்சமுதாய நலனப் போற்றிப் பாதுகாத்து வளர்த்து வருகின்றன. இவை பால் நினைந்துாட்டும் தாயினும் சாலப் பரிந்து நீர் அளித்தும் நிலம் விளேத்தும் காடு வளர்த்தும் கழனி புகுந்தும் மக்கள் உள்ளத்துக்கு மகிழ் வூட்டியும் மாசு போக்கியும் சிறந்த நாகரிகத்தை வளர்க்கின்றன. மக்கள் சிறப்புறும்போது அவன் காவிரியின் தண்ணிர் குடித்தவன் என்று புகழும் வழக்கம் இன்றும் உண்டல்லவா? எனவே ஆற்றங்கரையில் அமைந்த கல்வாழ்வு 22.