பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்களுக்கு-வானெலியில் தங்: பாவம்; அப்புறம். தாத: கன்ருகக் கதை கேட்கிறீர்கள். அந்த மேதை மோதிலால் வாழ்வை நீங்கள் கதையாக மட்டு மல்ல, உங்கள் வாழ்க்கைப் பாடமாகவே மனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இருவரும்: அப்படியே செய்கிருேம்; தாத்தா. தாத்: நல்லது. மோதிலால் பெரிய அண்ணன் பெயர் பன்சிலால், இளைய அண்ணன் பெயர் நந்தலால். இவர் நந்தலால் பார்வையிலேயே வளர்ந்தார். நந்தலால் சிலகாலம் ராஜ்ஸ்தானத்தில் ஆசிரிய ராக இருந்து, பின் வழக்கறிஞர் தொழிலுக்குப் படித்து வெற்றிபெற்று அலகாபாத்தில் வக்கீ லா க ப் பணியாற்றினர். அவருடனேயே மோத்திலால் நேருவும் அலகாபாத் வந்து சேர்ந்து விட்டார். பிறகுதான் மோதிலால் பெரியவரான பின், நான் முன்னமே சொன்னபடி ஆனந்த பவனத்தை வாங்கிப் புதுப்பித்து உயர்வடைங் தார். கோ. சரி தாத்தா, அவர் எங்களைப் போன்று இளைஞராயிருந்த காலத்தில் கன்ருகப் படித் தாரா? தாத்: நல்ல கேள்வி. மிகச் சிறந்த வகையில் படித் தார். பன்னிரண்டு வயது வரையில் பாரசீக அர்பி மொழிகளைப் பயின்ருர். பின் பள்ளியில் சேர்க் தார். எனினும் விளையாட்டுகளிலேயே அவர் காட்டம் சென்றது. ஆல்ை, பள்ளி ஆசிரியர் களிடமும் பிற பேராசிரியர்களிடமும் மதிப்பும் மரியாதையும் கொண்டு பணிந்து வாழ்ந்து வந்தார். அவர் பி. ஏ. வரையில் படித்தபோதி லும் வெற்றி பெறவில்லை. 28