பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோதிலால் நேரு தங்: ஐயையே-அப்புறம். தாத்: அந்தத் தேர்வில் வெற்றியில்லாவிட்டாலும் மோதிலால், வாழ்வில் பலப்பல வெற்றிகள் பெற்ருர். அவர் வழக்கறிஞர் தொழிலுக்குப் பயின்று கன்கு வெற்றி பெற்றுத் தங்கப்பத்க்கம் பரிசாகப் பெற்ருர். சிலகாலம் கான்பூர் மன்றத்தில் வழக்கறிஞராக இருந்து, பின் தன் தமையனர் கந்தலால் திறம்படச் செயலாற்றிய அலகாபாத் நீதிமன்றத்திலேயே தானும் வழக்கறி ஞரானர். பின்பே அவர்தம் வாழ்வில் வியத்தகு மாற்றங்கள் அமைந்தன. கோ.: ஆமாம். அவர் குடும்ப வாழ்க்கையைப் பற்றி? தாத்: இதோ சொல்லுகிறேன். அவர் காஷ்மீர் மரபைச் சேர்ந்த செருபாராணி என்ற அம்மை யாரைத் தம் துணையாகக் கொண்டார். அவர்கள் அழகாகவும் கணவர் கருத்தறிந்து நடக்கும் கல்ல மனேவியாகவும், கணவருக்குத் தேவையான போது பலப்பல உத்திகள் சொல்லும் மந்திரி யாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக கல்ல குடும்பப் பெண்ணுகவும் விளங்கினர். பிற்காலத் தில் ஆனந்தபவனம் அழகு பெற விளங்கியதற் கும் மோதிலால் குடும்பம் உலகம் போற்றிய வகையில் சிறப்படைவதற்கும் அந்த அம்மை யாரே காரணமாக இருந்தார்கள். இந்த இரு வருக்கும்தான் உலகமே போற்றும் உத்தமர் ஜவஹர்லால் நேரு 14-11-1889-ல் பிறந்தார். .ஜவஹர் என்ருல் இரத்தினம் என்பது பொருள். அவர் மனிதருள் இரத்தினமாக விளங்கின ரல்லவா? ہsvد 29