பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோதிலால் நேரு ஈடுபட்டார். அதன் மகாநாடு 1888ல் அலகாபாத்; தில் நடை பெற்றது. மோதிலால் அதில்தான் முதல் முதல் அரசியல் தொண்டராகச் சேர்ந்து செயலாற்றினர். பின்னர் பிற தலைவர்களுடைய தொடர்பும் காட்டு நிலையும் ஒன்றுசேர அவர் தம். உள்ளம் முழுக்க முழுக்க நாட்டுப் பணியில் ஈடு. பட, தம் செல்வ வாழ்வுக் கிடையில் தியாக வாழ்வை மேற்கொண்டார். கோ: அதுசரி தாத்தா, அவர் காந்தியடிகளோடு: எப்படி எப்போது தொடர்பு கொண்டார்? தாத்: தெரிந்துகொள்ள வேண்டுவதே. 1919ல் கா ந் தி ய டி. க ளி ன் சத்தியாக்கிரகப் போர்மோதிலால் நேருவின் உள்ளத்தை ஈர்த்தது. அதற்கு முன்பே அத்துறையில் உள்ளம் பழுத்து: நின்ற அவர், காந்தி அடிகளின் சேர்க்கையால் புடமிட்ட தங்கமானர். காந்தி அடிகளுடன் அது முதல் தொடர்ந்து பல பொருள்களைப் பற்றிச் சிந்தித்துச் செயலாற்றினர். சிலவிடங்களில் தன் மகன் ஜவஹர் சிக்கவேண்டாம் என்றஎண்ணத்துடன், த ா .ே ன அச்சிக்கல்களில் நுழைந்து, அவற்றை விடுவிக்கும் பணியில் ஈடுபட்டார். அக்காலத்திய தலைவர்களில் பலரும் மோதிலால் நேருவின் தொண்டையும் தூய்மை. யையும் புகழ்ந்தனர். 1919ல் அமிர்தசரஸ் காங்கிரசுக்குத் தலைமை வகித்தும் தாயக இயக்கங்கள் பலவற்றில் முன்னின்றும் வழி: காட்டினர். கல்கத்தா காங்கிரசுக்குப் பிறகு. தன் வக்கீல் தொழிலையும் விட்டு, முழுக்க முழுக்க நாட்டுப் பணிக்கே தன்னை உரிமையாக்கிக், கொண்டார். ஆம் 1931ம் ஆண்டு அவரும் 31