பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்களுக்கு-வானெலியில் ஜவஹரும் - தங்தையும்மகனும் - ஒரு சேரக் கைது செய்யப்பெற்று ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை பெற்றனர். அது முதல் 6.2-1931ம் ஆண்டு இவர் மறைந்த வரையில், நாட்டுக்கு இவர் செய்த தொண்டுகளே என்றும் சொல்லிக் கொண்டே இருக்கலாம். 1928ல் கல்கத்தாவில் அவர் இளைஞர்களை நோக்கிப் பேசிய பேச்சுகள் இன்றும் நாட்டுக்குத் தேவையே என்பது போன்று அமைகின்றன. இருவரும். அப்படியா என்ன பேசினர்? எங்களுக்கும் சொல்லுங்கள். தாத்: நீண்டு விடும். நீங்களும் இளைஞரானமையின் சுருக்கமாகக் சொல்லுகிறேன். 'இளைஞர்களே! நாட்டில் எதிர்காலத் தலைவர்களே! நல்ல திட்டத்தைத் தீட்டுங்கள். நாட்டின் நலம் அடிப்படைக் கருத்தாக இருக்கட்டும். திட்டங் களே எங்களிடம் கொடுங்கள். இப்படி இப்படிச் செயல்படவேண்டும் என்று சொல்லுங்கள். நாங்கள் செய்து முடிக்கக் காத்திருக்கிருேம். நான் என்றும் எப்போதும் இளைஞர்களாகிய உங்களுடன் இணைந்து தொண்டாற்றுவேன்' என்று முழங்கினர். கோபு: ஆகா எப்படிப்பட்ட கருத்து. தற்போது எங்களுக்கு இப்படி ஒரு தலைவர் கிடைத்தால் எவ்வளவு கன்ருக இருக்கும். தங்: ஆமாம் தாத்தா! இப்படி நாட்டுக்கு வழிகாட்டி யாக இருந்த இவரைப் பற்றிக் காந்தியடிகள் போன் ருர் கூறிய கருத்துக்களில் ஒரு சிலவற்றை 32