பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்களுக்கு-வானெலியில் கொண்ட இப்பெரும் கலைக்கோயில் யமுனை யாற்றங்கரையில் அழகுற அமைந்துள்ளது. இக்கலைக் கோயிலைச் சுற்றியும் பாரசீக அமைப் பில் உள்ள பெருங் தோட்டங்கள் அழகுற அமைந்துள்ளன. வள்ளி: ஆமாம்! இத்தகைய பெருங்கோயிலுக்குள் - என்ன இருக்கிறது அண்ணு? அண்ணு: நல்ல கேள்வி! இத்தகைய கலைக்கோயிலின் உட்புறத்தின் நடுவில் இரு கல்லறைகள் அழகிய சலவைக் கற்களால் அமைக்கப் பெற்றுள்ளன. ஒன்றில் மன்னர் ஷாஜஹானும், மற்ருென்றில் அரசி மும்தாஜும் அடக்கம் செய்யப் பெற்ருர்கள். அரசியின் வேண்டுகோளால் இது கட்டப்பெற, முதலில் அவரும் பின் மன்னரும் இருபக்க அறைகளில் அடக்கம் செய்யப் பெற்ருர் என்பர். எனினும் அவையிரண்டும் தற்போது ஒன்றுமற்ற அறைகளாக-அழகொடு அமைதியும் பெற்று விளங்குகின்றன. கம்பி. ஆமாம்! அதன் தோற்றத்தை ஏன் அப்படி உலகம் புகழ்கின்றது? அண்ணு: குழந்தாய்! அதைச் சென்று பார்த்தால் தான் புரியும்; சொல்லித் தெரிவதில்லை அக் கலைக் கோயிலின் சிறப்பு. அந்த உள்ளறையில் நன்கு இழைத்த சலவைக் கல்லின் வழியே சூரியனுடைய ஒளிக்கதிர்கள் புகும்போதுஅப்பப்பா- பொற்சரிகை இழைகளே மாலே மாலேயாகக் கோர்வை செய்து அழகுறச் சாத்தி யது போலல்லவா அது காட்சி அளிக்கின்றது. அக் கருவறையின் சுற்றுச்சுவர்களில் உள்ள 42