பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாஜ்மஹால் சலவைக் கற்களில் பலவிலைமதிப்பற்ற வண்ணக் கற்கள் பல்வேறு வேலைப்பாடுகளுடனும் பொருத் தப்பெற்று, அழகுடன் விளங்கும் காட்சியைக் கண்டுமகிழ முடியுமேயன்றி வாய்விட்டுச் செல்ல வும் கூடுமோ! இரு: மிக நன்ருக எங்கள் உள்ளத்தில் பதிந்து விட்டது. நாங்கள் அதை எப்போது காண் போம்? அண்ணு: கவலைப்படாதீர்கள். உலகில் பலபாகங் களிலிருந்து வரும் எண்ணற்ற மக்கள் கண்டு களிக்கும் அக்கலைக் கோயிலை நீங்களும் ஒரு நாள் காண்பீர்கள். ஏன்? உங்கள் பள்ளி வடகாட்டுச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்தால், கட்டாயம் ஆக்ராவும் அதன் தாஜ்மஹாலும் அதில் இடம் பெருமற் போகா! வள்ளி: கல்லது அவ்வாறு செல்லுதற்கு விரைவில் ஏற்பாடு செய்ய எங்கள் ஆசிரியரைக் கேட்டுக் கொள்ளுகிருேம் அண்ணு! அக்கலைக் கோயிலைப் பற்றி இன்னும் கேட்கலாம்போல் இருக்கிறதே! அண்ணு: ஆம்! கேட்கலாம். நிறைய இருக்கிறது. சொல்ல நேரம்தான் இல்லை. ஒன்று இரண்டினே மட்டும் இன்று சொல்லுகிறேன். இத்தெய்வத் தன்மை பொருங்திய கலைக் கோயிலில் முகமதிய வேதமாகிய குர்ரா'னிலிருந்து சில தெய்வ வாக் கியங்கள் அரபு எழுத்தில் அழகாகப் பொரிக்கப் பெற்றுள்ளமை அதன் தெய்வங்லத்தைச் சிறக்க வைக்கிறது. கம்பி. நல்லது ஒன்றை அறிந்தோம். இன்ருென்று சொல்வதாகச் சொன்னிர்களே? இரண்டாவதாக? 43