பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை முறை செய்து காப்பாற்றும் மன்னவன் : பிள்ளைகளே! உங்களுக்கு இன்று நான் ஒரு கதை சொல்லப் போகிறேன். கேட்கிறீர்களா? ஆம்! ஆம்' கேட்கிருேம் என்ற குரல்கள் என் காதில் விழுகின்றன. என் கதையைச் சொல்வதற்கு முன் 'முறை' என்ற சொல்லேப் பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டும். முறை என்ருல் உறவின் முறை என்ற பொருளும் உண்டு, நல்ல முறையாக ஆளுதல் என்ற பொருளும் உண்டு அல்லவா? இந்தச் சொல்லுக்கு இரண்டு பொருள் இருந்தாலும் ஒரு பொருளைப் பற்றில்ை இன்னென்று பொருந்தாது ஆகிவிடும். ஆம்! அரசன் உறவின் முறை பற்றிச் செயலாற்றினல் நல்ல முறையாக ஆள முடியாது. நல்ல முறையாக ஆளுபவர் யாவராயினும், அவர்கள் உறவு முறை பற்றிச் சாராது ஒழுங்காக ஆட்சி செய்வார்கள். அவ்வாறு ஆட்சி செலுத்தி, தவறு இழைத்தவன் தன் மகனே என்று அறிந்த போதிலும் அவனைத் தண்டித்த மனுச் சோழன் கதை நீங்கள் அறிந்த தல்லவா? ஆம்: அது பழைய கதை. இதோ இப்போது ஒரு புதிய கதையை உங்களுக்குச் சொல் கிறேன்; கேளுங்கள். பொன்னடு என்பது ஒரு நாடு. அந்த நாடு நல்ல இயற்கை வளம் பொருந்தியது; மாதம் மும்மாரி

  • சிறுவர் நிகழ்ச்சி வானெலி 29-5-74

46