பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முறை செய்து காப்பாற்றும் மன்னவன் பெய்யும் நாடு; நிலமும் நல்ல வளம் பெற்றது. எனவே அந்த நாட்டில் எல்லாப் பொருள்களும் நன்கு, விளைந்தன. அது மட்டுமின்றி அந்தப் பொன் டுை: என்ற பெயருக் கேற்ப, அங்கே பொன், இரும்பு, நிலக்கரி போன்ற பல வேறு கணிப் பொருள்களும் தோண்டி எடுக்கப் பெற்றன. ஆகவே அந்த காட்டில் நல்ல உணவுப் பொருள்கள் மிகுதியாகவும் கைத்தொழிலால் உண்டான பொருள்கள் பலவாகவும். கிடைத்தன. மக்களும் தங்கள் தேவைகளுக்கு ஏற்றஎல்லாப் பொருள்களும் கிடைத்த காரணத்தாலே எங்தவிதக் கவலையும் இன்றி, மன நிறைவோடு" வாழ்ந்து வந்தனர். பொன்னட்டை ஆண்ட நன்னன் என்பவன் நல்ல மன்னன். அவன் மேலே கண்ட இயற்கைப் பொருள், கைத்தொழிற் பொருள் முதலியவற்ருேடு, வேறு தேவையானவற்றையும் மக்களுக்கு அவ்வப் போது கிடை க்கும்படி ஏற்பாடு செய்திருந்தான். எனவே மக்கள் அவன் காலத்தில் யாதொரு குறையும் கவலேயும் இல்லாமல் வாழ்ந்து வந்தனர். அவர்கள் ஒற்றுமையாக வாழ்ந்த காரணத்தால் காட்டில் உட்பகை மட்டு மல்லாமல் வெளிநாட்டுப் பகையும் இல்லையாக, நாடே அமைதியாக இருந்தது. பூலோகசுவர்க்கமாக’ அந்த நாடு அமைந்திருந்தது. எனவே: காடு முழுவதும் அம்மன்னனைப் போற்றி விழாக். கொண்டாடினர் மக்கள். நாள் நமக்கென நிற்பதில்லை அல்லவா? அங்த. மன்னன் வயதாக மறைந்து விட்டான். அவன் மகன் அறிவாளன் பட்டத்துக்கு வந்தான். அவனும்: பெயருக்கேற்ப நல்ல அறிவுடையவன். என்ருலும் மக்கள் மனமறிந்து - அவர்கள் தேவை அறிந்து. 47