பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முறை செய்து காப்பாற்றும் மன்னவன் முன்னேய நாளைவிட அதிகமாகக் கஷ்டப்பட்டு வேலை செய்தும், காட்டிலே எல்லாப் பொருள்களும் நன்ருக. விளைந்தும் நாம் வருத்தப் படுகிருேமே! அவன் தெய்வம்' என்ற வாசகங்கள் அவன் காதில்பட, மக்கள் தன் தகப்பனைத் தெய்வமாகப் பொற்றுவ: தற்கும் தன்னை நிந்திப்பதற்கும் என்ன காரணம். இருக்கும் என ஆராய நினைத்தான். தன் மந்திரிகளே அழைத்து, எல்லாவற்றையும்: கூறி, காரணம் யாதாக இருக்கும் எனக் கேட்டான். அவர்கள் முன்னமே அதுபற்றி அறிந்தவர்களா யினும், அரசனிடம் சொல்ல அஞ்சி யிருந்தனர். இப்போது அவனே கேட்கவே சொல்லலாயினர். அரசனின் மைத்துனன் சபலன் என்பவனுடைய கொடுமையே எல்லாத் துன்பங்களுக்கும் மூல காரணம்: என்பதை எடுத்துக் காட்டினர். அவன் நாட்டில் விளைகின்ற பொருள்களை யெல்லாம் தன் கையாட்களை வைத்து, குறைந்த விலையிலும் கொள்ளையிலும். கொண்டு சேர்த்து, எங்கோ மறைத்து விடுவதாகவும், அப்படியே தொழிலகத்திலிருந்து உருவாகும் பொருள் களையும் பதுக்கி விடுவதாகவும் கூறினர், பின் அவற்றைக் கொள்ளே லாபம் வைத்து, தேவையானல்வெளியில் விடுவதாகவும், இல்லையானல் மேலும் பதுக்குவதாகவும் கூறினர். இவ்வளவு கொடுமை. செய்தும், அவன் அரசனுடைய மைத்துனன் ஆனமை யில்ை மக்கள் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் வாடிவருந்தி அவலமுற்று மிகவும் தத்தளிக்கும் நிலையில் உண்மையைக் கூறினர். மேலும் தங்களுக்கே யாவும் தெரிந்திருந்தும், மன்ன னிடம் கூறினால் ஒருவேளை மன்னனுடையதும், அவர் மைத்துனனுடையதுமாகிய சீற்றத்துககு ஆளாக, 49