பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்களுக்கு-வானெலியில் வேண்டி வரும் எனச் சொல்லாதிருந்த நிலையையும் வி ள க் கி ன ர். மைத்துனனுக்கு மாறுபட்டால் காட்டில் வாழ முடியாத கொடிய சூழ்நிலையையும் சொன்னர்கள். அவன் செய்யும் கொடுமைகளை கன்ருக விளக்கினர்கள். இவற்றை யெல்லாம் கேட்ட மன்னன் மனம் வருந்தின்ை. அவன் நல்லவன்; எனவே இது -வரையில் இவைகளைப்பற்றி யெல்லாம் தன்னிடம் கூருதிருந்ததற்காக மந்திரிகளைக் கடிந்து கொண்டான். தன் மனைவியின் தம்பி என்ற காரணத்தால் அவன் எந்தக் கொடுமை செய்தாலும் பொறுத்துக் கொள்ள முடியாது எனக் கூறினன். மனுநீதி தவரு மரபினை எண்ணினன். தன் மனைவி, மக்கள், உறவினர் இவர் களின் வாய்ச் சொல்லுக்கோ, பகைக்கோ அவன் அஞ்சவில்லை. மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்', 'குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல் வடுவன்று வேந்தன் தொழில் என்று அவன் வாய் பேசிற்று. 'கொலேயிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட்டதைெடு கேர் என்று உள்ளம் நினைத்தது. செயல் பிறந்தது. மந்திரிகளை அழைத்து இத்தகைய கொடுமையாளனுக்கு என்ன தண்டனை சட்டப்படி தர வேண்டியுள்ளது என விசாரித்தான். அந்த நாட்டுச் சட்டம் கொடுமையை வன்மை யாகக் கண்டிப்பதாயிருந்தது. தவறு செய்ய நினைப் பவர் தண்டனைக்கு அஞ்சி விலகும் வகையில் தண்டனேயை வலியுறுத்தப்பெற்றிருந்தது. இத்தகைய கொடுமைகளை மக்களுக்கு இழைக்கும் கொடியவன் யாவனயினும் அவனே காற்சந்தியில் கழுவில் ஏற்றிக் -கொலை செய்யவேண்டுமென்பதே அங்காட்டுச் சட்டம். தொங்கும் அக்கொடியவரைக் காணும் உலகம் 50