பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முறை செய்து காப்பாற்றும் மன்னவன் திருந்தும் என்பது அவர்கள் நம்பிக்கை. எனவே மந்திரிகள் அத்தண்டனையை விளங்கிக் கூறினர். கேட்ட அரசன் சிறிதும் சஞ்சலமோ கவலையோ அடையவில்லே. காவலாளிகளே அழைத்து, கழு மரத்தை காற்சங்தியில் காட்டச் செய்தான். மைத்துனன் தப்பி ஓடாதிருக்கும்படி சிறை செய் தான். அரசியும் அரசனுடைய நற்பண்புக்கு ஏற்றவள்; எனவே தன் தம்பிக்குப் பரிந்து பேசாமல் அரசன் இடும் ஆணை சரியானதே என்று கூறினுள். ஒரு நாளில் சபலன் கழுவேற்றப்பட்டான். ஆனல் அவன் கையாட்கள் எல்லாம் - கருவிகளாகப் பயன்பட்டமையின் மன்னிக்கப் பெற்றனர். இந்த நிகழ்ச்சிகளைக் கண்ட நாட்டு மக்கள் இவனன்ருே மன்னன் என்று வாழ்த்தினர். முறை செய்வதில் தங்தையை மிஞ்சி விட்டான் என்றனர். ஆமாம். மைத்துனன் முறையை மதிக்காது மக்களைக் காக்கும் அரச முறையைப் போற்றிய இந்த மன்னனே "கம் கண் கண்ட தெய்வம்' என வாழ்த்தினர். " முறைசெய்து காப்பாற்று மன்னவன் மக்கட் சியையென்று வைக்கப் படும் " என்ற குறளை அவர்கள் வாய் விண்முட்ட எடுத் துரைத்தது. கடவுள் எங்கோ இல்லை; இதோ இங்கே இருக்கிருர் என்று அவனைப் பாராட்டினர். அன்று முதல் நாடு நாடாகி, எல்லாரும் எல்லாச் செல்வமும் எளிதில் பெற்று இன்பத்தில் திளைத்தனர். ஆம்! நாமும் அந்த நல்ல நாட்டினைப் போல நம் உலகமும் திருந்த வேண்டும் என்று இறைவனே வேண்டுவோமாக! 51: