பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவா மாமா குழதைகளே என்னைப் பற்றி என்ன பேசு கிறீர்கள்? கோபாலன்: ஒன்றுமில்லை மாமா. இவள் பக்கத்து வீட்டு மாலதி. நீ கோவாவைப் பற்றிச் சொல்லப் போவதாகச் சொன்னேன். அவளும் கேட்க வேண்டுமாம்! மாலதி: ஆமாம் மாமா! எங்கள் பாடத்தில் கோவாவைப் பற்றிக் குறிப்பு வருகின்றது. மாமா: கன்ருகச் சொல்லுகிறேன். கேளுங்கள். மாலதி: கோவா மக்கள், காட்டு இயற்கைச் சூழல், கைக்தொழில், மக்கள் வாழ்க்கை முறை இவை பற்றி யெல்லாம் அறிந்து கொள்ள ஆசையாக இருக்கிறது. - கோபாலன்: ஆமாம். மாமா! மாமா: குழங்தைகளே! உங்கள் ஆர்வத்தை உணர்ங் தேன்; சொல்லுகிறேன்; கேளுங்கள். இந்திய நாட்டின் பரந்த மேற்குக் கடற்கரை ஓரத்தில் கோவா ஒரு சிறு பகுதி. அது தற்போது இந்திய அரசாங்கத்தின் நேர்முக ஆட்சி அமைப்பில் உள்ளது. கோபாலன்: ஏன் அப்படி? மாமா: அப்படிக் கேளுங்கள். நம் நாட்டு இந்திய அரசாங்கம் எல்லாவற்றிலும் தம் மக்கள் மனத்தை அறிந்து நடக்கும் நல்ல அரசாங்கம் அல்லவா? இருவரும்: ஆமாம்! ஆமாம்! மாமா. அந்த அரசாங்கத்தில் நேரு தலைவராக இருந்த போதும் பிறகும் தனிப்பண்பாட்டுடன் உள்ள 53.