பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்களுக்கு-வானெலியில் சிலவற்றை அவற்றின் தூய்மை கெடாத வகையிலே காத்து வருகின்றனர். பிரஞ்சு ஆதிக் கத்தின் கீழ் இருந்த நம் பக்கத்திலுள்ள புதுச் சேரி, காரைக்கால் போன்றவற்றை-அந்த நாகரிகம், பண்பாடு முதலியன தனி வகையில் அமைந்து உள்ளமையின்-தனியாகவே இந்திய அரசின் நேரடிப் பொறுப்பில் வைத்திருக்க வில்லையா? அப்படியே போர்ச்சுகீசிய அரசாங் கத்தின் கீழிருந்த கோவா, டையூ, டாமன், தாதர், நாகர் அவாலி ஆகியவற்றின் தனித்தன்மையும் கெடாது மத்திய அரசின் நேர் ஆட்சியின் கீழ், தனியாகவே அமைத்துள்ளனர். மாலதி, அந்த நாட்டு மக்கள் அப்படித் தனியாகவே இருக்க விரும்புகிருர்களா என்ன? மாமா. நல்ல கேள்வி ஆமாம், சிலர் அதைப் பக்கத் திலுள்ள மராட்டிய மாநிலத்தோடு இணைக்க, வேண்டுமென்று கிளர்ச்சி செய்தனர். எனினும் இந்திய அரசாங்கம் அது பற்றியே 1967இல் ஒரு பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்திற்று. அகன் முடிவு மக்கள் தனித்து வாழவேண்டு மென்பதே. மக்கள் சொல்லுக்கு மதிப்புக் கொடுக்கும் இந்திய அரசாங்கம் அப்படியே அதைத் தனியாக வைத்திருப்பதோடு, அதன் கல்வி, தொழில் பிறவெல்லாம் வளர்வதற்குப் பல வகையில் உதவி செய்கிறது. கோபாலன்: ஆமாம் கோவாவுடன் வேறு சில வற்றையும் சொன்னிர்களே; அவை எப்படி எங்கே உள்ளன? மாமா: அப்படிக் கேளுங்கள்! கோவா, மேலைக் கடற் கரையில் ஒரு பக்கம் கருநாடக நாடான மைசூர்ப் 54