பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவா பகுதியும் மற்ருெரு பக்கம் மராட்டிய நாடன. பம்பாய்ப் பகுதியும் நிற்க, இடையில் சுமார் 2000 சதுர மைல் கொண்டதாக அமைக் துள்ளது. டாமன் என்பது காம்பே வணிள குடாவின் முகத்துவாரத்தில் பம்பாய்க்கு வடக்கே உள்ளது. டையூ என்பது செளராட்டிர் எல்லேயில் உள்ளது. தாதர், நாகர் அவாலி கோவாவின் அருகில் உள்ள சிறு பகுதிகள். மாலதி: இப்படி முன்றிடத்திலும் பிரிந்து இருக் தாலும் எல்லாம் ஒன்ருகவே உள்ளனவா? மாமா ஆமாம். இங்கே காரைக்காலும் புதுச்சேரியும் இணேங்தில்லையா, அப்படியே. ஆயினும் அவை தாம் சார்ந்திருக்கும் நிலத்திற்கும் சூழலுக்கும் ஏற்ப அவரவர் மொழி, வாழ்க்கை வளம், முதலியனவற்றில் சற்றே மாறி யிருக்கும். கோபலன்: எப்படி? மமமா: கோவா மக்கள் கொங்கணி மொழியையும், சிறு பகுதியினர் மராத்தி மொழியையும் பேசுவர். டையூ, டாமன் பகுதியில் உள்ளவர்கள் குஜராத்தி மொழியினைப் பேசுவர். மொழி மட்டு மனறி வாழ்க்கை முறை முதலியனவற்றிலும் மாறுபாடுகள் உள்ளன. மாலதி: இவை போர்ச்சுகல் ஆட்சியில் இருந்தன என்றீர்களே, எப்படி, இன்று இந்திய அரசுடன் இணைந்துள்ளன? மாமா: இந்தியாவிற்கு வாணிபத்துக்காக முதன் முதல் வந்தவர் போர்ச்சுகீசியர் என்பதும் அவருள் 'வாஸ்கோடகாமா என்பவர் தற்போதைய 55