பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவ்ா சிறுசிறு தீவுகள். இதைச் சார்ந்த டையூ, டாமன் ஆகிய பகுதிகளும் கல்ல ஊர்களுடன அழகாக அமைந்துள்ளன. கோவா என்றும் பசுமையான பகுதி. மாலதி, ஆமாம். இத்தனை அழகான ஊரில் வாழும் மக்கள் வாழ்க்கை முறை பற்றிச் சொல்ல வில்லையே. மாமா: சொல்லுகிறேன். முன்னமே அவர்கள் அழகானவர்கள் என்று சொன்னேன் அல்லவா? அவர்களுள் பெரும்பாலோர் இனிய கொங்கணி’ என்ற மொழியைப் பேசுகின்றனர். பக்கத்து காடுகளின் மொழிகளாகிய மராட்டியும் கன்னட மும் வழக்கத்தில் உள்ளன. கொங்கணி மொழி யில் மக்கள் கலந்து பாடி ஆடுவது கேட்கவும் காணவும் மிக அழகாகவும் இனிமையாகவும் இருக்கும். அங்கே கால்வகை மரபுகளும் உள்ளன. எனினும் அந்த வேறுபாடே எங்கும் தெரியாது. கொங்கணிகள் வாணிப வளம் பெற்ற வர்கள். பழைய காலத்திலேயே-கிழக்கிந்தியக் கம்பெனி வந்த போதே-இவர்கள் மாமிச உணவு தவிர, மற்ற எல்லாப் பொருள்களையும் வாணிபம் செய்தனர். அதனல் அவர்கள் இவர் களுக்கு உயர்ந்த உத்தியோகங்கள் கொடுத்தனர் என்பர். தற்போது பல ஆண்களும் பெண்களும் மீன் பிடிக்கும் தொழிலில் உள்ளனர். இந்த காட்டிலிருந்து, சமய மாறுபாட்டாலும் பிற வேறுபாடுகளாலும் இந்த எல்லையை விட்டுச் சிலர் கேரள நாட்டுக்குச் சென்றனர். அவர்கள் மலபார் கொங்கணிகள் என அழைக்கப் பெறு கின்றனர். அவர்கள் பழக்க வழக்கம், மொழி, (59.