பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்களுக்கு-வானெலியில் வழிபாடு பிற அனைத்தும் பழைய கொங்கணிகள் முறையிலேயே உள்ளன. மலபார் அப்பளமாகிய பப்படத்துக்குமூலகாரணர் இக்கொங்கணிகளே என்பர். இவர்களுள் ஆண், பெண் இருவீரும் எப்போதும் சுறுசுறுப்பாக ஏதேனும் செய்து கொண்டே இருப்பர். மாலதி: ஆமாம் வழிபாடு என்lர்களே, அவர்கள் வழிபாடு முதலிய பற்றிச் சொல்லவல்லேயே. மாமா: அப்படிக் கேள். கோவாவின் தலைநகரிலே அழகிய வெள்ளை அடிக்கப் பெற்ற கிறித்துவ சமயக் கோயில்கள் காட்சி தரும். அந்தக் கோவாப் பகுதியில் சுமார் 100க்கு 40 பேர் கிறித்தவர்களாக உள்ளனர். அவர்கள் மேலே காட்டுப் பண்பொடு வாழ்கின்றவர்கள். பழங்காலமுதல் காளி முதலிய தெய்வங்களை வழிபடுகிறவர்களும் அங்கே இருக்கிருர்கள். போர்ச்சுகீசியர் வந்த போது இருந்த, ஆற்றிடை யிலிருந்த, பாறைகளின்மேல் கட்டப் பெற்ற கோயில்கள் ஒன்றுகூடத் தற்போது இல்லை. என்ருலும் இந்துக்கள் அனைவரும் ஆண்டுக்கொரு முறை அந்த இடங்களில் கூடித் தெய்வத்தை வழிபடுகின்றனர். அண்மையில் அங்கு நடை பெற்ற நில அகழ்வாராய்ச்சியின்படி, சந்தூர் கிராமத்தில் கண்ட ஓரிடம் 11ஆம் நூற் ருண்டில் கடம்ப அரசர் நகரமாக இருந்த தென்றும் அங்கே இந்துக் கோயில் இருந்த தென்றும் அறிகிருேம். அதிலிருந்து எடுக்கப் பெற்ற இடபம் அழகாக உள்ளது. இப்படித் தோண்டினல் இன்னும் எத்தனையோ கிடைக் கலாம். தவிர மாரியம்மன் கோயில் போன்றும் (60