பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனிய எளிய தமிழ் உரைநடை மாணவர்-1: கன்கு தெரிந்து கொண்டோம். கம் தமிழ் மொழி இத்தகைய இனிய எளிய வகையில் பேசவும் எழுதவும் பயன்படு மொழி என்று தாங்கள் பலமுறை சொல்லி இருக்கிறீர்கள். எனினும் அது பற்றித் தாங்கள் மறுபடியும் சோல்வீர்களா? . பெரியவர்கள்: குழந்தைகளே, நன்ருகக் கேளுங்கள். சொல்லத் தானே இருக்கிறேன். தமிழ் பழை மையான மொழி மட்டுமன்று - இனிமையான மொழியும்கூட. மேலும் தமிழை இருமுறை படித்தாலோ கேட்டாலோ மனத்தில் அப்படியே அது படிந்துவிடும். தமிழில் ஓரெழுத்துச் சொற்கள் தொடங்கி, வரிசையாகப் பல எழுத் துக்கள் கொண்ட நல்ல எளிய சொற்கள் உள்ளன. ,ே ஆ, பூ, மா, கா, பா, ஈ, போன்ற பெயர்ச் சொற்களும், வா, போ, துா, சா, கா, போன்ற வினைச் சொற்களும் எளிமையும் இனிமையும் பொருந்திய ஓரெழுத்தாலாகிய சொற்கள். இப்படியே ஈரெழுத்திலும் மூவெழுத் திலும் பல சொற்கள் உள்ளன. இவை எல்லோருக்கும் புரிவன - அதே வேளையில் இனிமையாகப் பேசவும் எழுதவும் பயன்படுவன. அப்படியே ஒருமை பன்மை முதலியனவும் பெரியவர்களுடன் மரியாதையாகப் பேசப் பயன் பெறும் சொற்களும் அச்சொல் முடிவுகளாகிய விகுதிகளும் உள்ளன. இவையெல்லாம் உங்கள் உள்ளங்களில் கன்ருகப் பதியு மல்லவா? மாணவர்: ஆம்! ஆம். கன்ருகப் பதியும் என்பதில் தடை ஏது ஐயா? - - 71.