பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்களுக்கு-வானெலியில் பெரியவர்: இன்னும் கேளுங்கள். முதலில் நான் கண்டபடி, மொழி கருத்தை உணர்த்துவது ஆனபடியால் நல்ல கருத்துக்களே எளிமையான இனிய தமிழில் பேசில்ைதான் தமிழ் மக்கள் எல்லோரும் நன்ருகப் புரிந்துகொள்வார்கள். அந்த எளிமையும் இனிமையும் கலந்த தமிழே அந்த மக்கள் உள்ளங்களில் நல்ல கருத்துக்களே உண்டாக்கும். அந்த நல்ல கருத்துக்களே அவர்கள் வாழ்வை கலம் உள்ளதாக்கும். அவர்கள் உயர்வார்கள். சமுதாயம் உயரும். மாணவர்-3: ஆகவே மக்கள் சமுதாயம் உயர வேண்டுமானல் நல்ல எளிய இனிய தமிழ்தான் வழி என்பது தானே தங்கள் முடிவு? பெரியவர்: குழந்தாய்! நன்ருகச் சொல்லிவிட்டாய். உண்மை அதுதான். உலகத்தில் உயர்ந்த பெரிய தலைவர்களெல்லாம் பேசவும் எழுதவும் எளிய இனிய மொழியையே கையாண்டுள் ளார்கள் என்பதைக் காணமுடிகிறதே. இந்தி யாவுக்கு விடுதலே வாங்கித்தந்த காங்தி அடிகளார் ஆங்கில மொழியில் - அவர் தாய்மொழியில் - இனிமையாக - எளிமையாகப் பேசியும் எழுதியுமே உலகத்தைத் தம் பக்கம் இழுத்துக்கொண்டார். கவிஞர் பாரதியாரின் உரைநடை மட்டுமல்லாது. பாட்டும்கூட எளிமையாக இருந்த காரணத் தில்ைதான் அன்றும் இன்றும் தமிழர் அவரைப் போற்ற முடிகின்றது. பாட்டிலும் எளிமை புகுத்தியவர் அவர். மாணவர்-3: பாட்டில் எளிமை கூடாதோ? பெரியவர்: இல்லே. அப்படி இல்லே. அதுவும் எளிமையானல் நல்லதுதான். ஆனல் பாட்டு 72