பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தைகள் கல்வி செல்கின்றனர். இதற்கிடையில் பலர் தத்தம் குழந்தைகளுக்கு உயர்தரக் கல்வி அளிக்க வேண்டும் என்ற கருத்தால், தம் வாழ்க்கை வசதிகளைக் குறைத் துக் கொண்டாவது பிள்ளைகள் கல்விக்குப் பெருங் தொகையினைச் செலவிட கினைக்கின்றனர்; செலவிடு கின்றனர். அரசாங்கம் கல்வியை இலவசமாக்கியது. ஒரு பக்கத்திலே கலமெனத் தோன்றிலுைம், அதன் மறுபக்கத்திலே அதன் வீழ்ச்சியும் தரக்குறைவும் நமக் குப் புலப்படுகின்றன. அரசாங்க மானியம் பெறும் பள்ளிகளின் ஒவ்வொரு வகுப்பிலும் 60 (அ) 70 வரை மாணவர் சேர்க்கப் பெறுவதால், ஆசிரியர் மாணவர் தொடர்பு பொருங்துவதில்லே. எனவே பல பெற்ருேர், தம் பிள்ளைகளுக்கெனத் தனியார் பள்ளிகளை நாடு கின்றனர். காட்டின் இந்தச் சூழ்நிலையைச் சிலர் நன்கு புரிந்து தனித்த வகையில் கல்வி நிலையங்களை நிறுவி, நல்ல முறையில் அவற்றை கடத்த முயற்சிகளே மேற். கொள்ளுகின்றனர். ஆயினும் ஒரு சிலர் இதை ஒரு. வாணிபமாகவே கருதித் தரத்தைப் பற்றிக் கவலே. யுருது,வெறும் கல்விக் கூடங்களே அமைக்கின்றனர். காட்டில் ஊர்தொறும் பலப்பல பள்ளிகள் தோன்று வதைக் கண்டு மகிழ்ச்சி அடையும் அதே வேளையில், அவற்றின் தரத்தைக் கண்டு வேதனையடைய வேண்டி யுள்ளது. வயது மூன்ருனவுடன் தம் பிள்ளைகளைப் பள்ளிகளில் சேர்க்கப் பெற்ருேர் விரும்புகின்றனர். அதிலும் ஆங்கில மோகமும் அம்மொழியைக் கற்க வேண்டுமென்ற அவாவும் அதிகமாவதால் ஆங்கிலம். பயிற்சி மொழியாக உள்ள பள்ளிகளை நாடுகின்றனர். இளங்குழந்தைகளின் பிஞ்சு உள்ளங்களில் பதியும் எண்ணங்களே அவர்தம் பிற்கால வாழ்வை உருவாக்குவது உண்மையாதலால், அந்த இளம் 76