பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தைகள் கல்வி வருவது இயல்பே. எனினும் பள்ளியை நடத்து, பவர்கள் தாயுள்ளமும் பண்பும் ஒழுக்கமும் நிறைந்தபெண்களையே குழந்தைகள் பள்ளிக்கு ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். - பெற்ருேர்கள் தம் பிள்ளைகள் கல்வியில் கொண்ட பற்றின் காரணமாக எவ்வளவு: பணமாயினும் செலவு செய்ய முன்வருவதைப் பயன் படுத்தி, அந்தச் சம்பளம் பெற்றும் அதற்கேற்ற கல்வித் தரம் அமைக்கவில்லையாயின் பெருந்தவருகும். பிள்ளைக்கு விளையாட்டு உணர்வுடன் கல்வி கற்பிக்க எண்ணற்ற துணைக்கருவிகள் உள்ளன. பல பள்ளி' களில் அவை வாங்கப் பெறுவதில்லை; வாங்கி) வைத்துள்ள சில பள்ளிகளில் பல ஆசிரியர்கள் அவற்றைப் பயன்படுத்துவதில்லை. இக்குறை நீக்கப் பெறல் வேண்டும். சிலபள்ளிகளில் வெறும் பேச்சு மொழியை மட்டும். குழந்தைகளுக்கு கிளிப்பிள்ளைகளுக்குச் சொல்லுவது. போலச் சொல்லிக் கொடுத்து வெளிப்பகட்டில் செயலாற்றுகின்றனர். பெற்ருேரில் சிலரும் இந்தப் பேச்சுகளில் மயங்கி மகிழ்கின்றனர். ஆனல் இப் பிள்ளைகள் மேல் வகுப்பிற்கு வரும்போது பல்வேறு பாடங்களில் குறையுடையவர்களாக உள் ள ன ர். எனவே பேச்சு, எழுத்து இரண்டிலும் அந்த இளங்: குழந்தைகள் நன்கு பயிற்றிடப் பெறவேண்டும். இளங்குழங்தைகளின் கல்வித்தரம் ஒழுங்கில்லாத, ஒரே காரணம்தான் நாட்டில் இன்றைய கல்விக். கூடங்களெல்லாம் ஆரவாரக் கூட்டங்களாக மாறு: கின்ற நிலையில் நம்மை வைத்துள்ளது. இளம் குழங்தைகள் உள்ளம் மாசு படியின் பின் வாழ்வு: 79