பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 வெளிகளுக்குப் பின் மீண்டும் இரு தடவைகளில் கொடுக்கப்பட வேண் டும். அம்மை குத்துவதுபோல் ஊசி மூலமும் இம்மருந்தைச் செலுத்தி நோய் வராமல் தடுக்கலாம். அரசு மருத்துவமனைகளில் இம்மருந்து இலவசமாகவே வழங்கப்படுகிறது. இஸ்லாம்: உலகின் இரண்டாவது மாபெரும் மார்க்கம் இஸ்லாம் ஆகும். 'இஸ்லாம்' என்பதற்கு சாந்தி மார்க் கம்' என்பது பொருளாகும். இம்மார்க் கத்தைப் பின்பற்றுபவர்கள் முஸ்லிம் கள்' என அழைக்கப்படுவர். முதல் மனிதர் ஆதாமுக்கு இறை வன் வகுத்தளித்த மார்க்க நெறியே இஸ்லாம். ஆதாம் தொடங்கி அவ் வப்போது இறைவனால் அனுப்பப் பட்ட தீர்க்கதரிசிகள் இஸ்லாமிய மார்க்கத்தைத் தொடர்ந்து மக்களுக் குப் போதித்து வந்தனர். இவர்கள் நபிமார்கள் ஆவார்கள். இவ்வாறு இறைத் தூதர்களாக மக்களுக்கு இஸ் லாமிய நெறியைப் பரப்ப வந்த நபி மார்களின் எண்ணிக்கை ஒரு இலட் சத்து இருபத்திநான்காயிரம் ஆகும். அவர்களுள் இறுதி நபியாக வந்தவர் முகம்மது நபி (சல்) ஆவார். இவரால் இஸ்லாமிய மார்க்கம் இறுதியானதாக வும் நிலையானதாகவும் ஆக்கப்பட் டது. இஸ்லாமிய நெறியின் விளக்கமாக அமைந்திருப்பது ‘திருக்குர்ஆன் மறை நூலாகும். இஃது இறைவனால் நபிகள் நாயகத்திற்கு அருளப்பட்ட தாகும். இஸ்லாம் ஐம்பெரும் கடமைகளைப் போதிக்கிறது. அவையாவன, 1.இறை நம்பிக்கை (கலிமா) 2. ஐவேளைத் தொழுகை, 8. நோன்பு, 4. ஜக்காத்து (ஏழைவரி) 5. ஹஜ் ஆகும். இ.ர க் இறைநம்பிக்கை (கலிமா): இறைவன் ஒருவனே; அவனே அல்லாஹ்:உருவ மற்றவன்; இணை, துணை இல்லாத வன்; பிறப்பு, இறப்பு அற்றவன்; அல்லாஹ்வை மனத்தால் மட்டுமே எண்ணி வணங்க முடியும். தொழுகை: ஒரு நாளைக்கு ஐந்து முறை அல்லாஹ்வைத் தொழவேண் டும். நோன்பு: ஆண்டுதோறும் ரமளான் மாதம் முழுவதும் பகலில் உண்ணாம லும் ஒரு சொட்டு நீரும் பருகாமலும் நோன்பிருக்க வேண்டும். ஜக்காத்: இஸ்லாம் விதிக்கும் ஏழை வரி ஜக்காத் ஆகும். ஒவ்வொரு முஸ் லிமும் தனக்குள்ள சொத்து மதிப்பு, வருமானம் ஆகியவற்றில் 40இல் ஒரு பங்கை அதாவது இரண்டரை சத வீதத்தை ஏழை எளியவர்களுக்குத் தானமாகத் தந்துவிட வேண்டும். ஹஜ்: ஒவ்வொரு முஸ்லிமும் தம் வாழ்நாளில் ஒரு முறையேனும் மக்கா வில் உள்ள “கஃபா எனும் இறையில் லம் சென்றுவரவேண்டும். இந்த ஐந்து கடமைகளையும் ஒவ் வொரு முஸ்லிமும் கட்டாயம் கடைப் பிடிக்க வேண்டும். மனிதர்கள் அனைவரையும் சகோத ரர்களாகக் கருதவேண்டும்; பெண்க ளுக்குச் சமஉரிமை வழங்கவேண்டும்; குடிக்கக் கூடாது; வட்டி வாங்கக் கூடாது; மற்றவர்களிடம் அன்பு காட்டவேண்டும்; நேர்மையாக வாழ வேண்டும் என்பன இஸ்லாமியப் போதனைகள் ஆகும். ஈராக் தென்மேற்கு ஆசியாவில் இந்நாடு அமைந்துள்ளது. இது முற் காலத்தில் மெசப்பொட்டேமியா’ என அழைக்கப்பட்டது. யூப்ரிட்டீஸ்,