பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தட்டெழுத்து வந்த டோக்கியோ நகரம் 1923ஆம் ஆண்டில் நில நடுக்க்த்தால் பெரும் பாதிப்புக்கு ஆளாகியது. அழிந்த பகுதிகளைப் புதுப்பிக்கும் போது மேனாட்டுப் பாணியில் கட்டடங் களையும் சாலை அமைப்புகளையும் உருவாக்கினார்கள். மீண்டும் இரண் டாம் உலகப் போரின்போது பெரும் அழிவுக்கு ஆளாகியது. ஆனால் போருக்குப் பிறகு ஜப்பானியர் மிகக் கடுமையாக உழைத்து நகரைப் பொலிவோடும் வலுவோடும் உரு வாக்கினர். டோக்கியோ நகரம் டோக்கியோ வளைகுடாவை ஒட்டி அமைந்துள் ளது. இந்நகரத்திடையே கமியா ஆற் றின் கால்வாய்கள் பல ஒடிக்கொண் டிருக்கின்றன. டோக்கியோவில் புகழ்பெற்ற புத்த கோயில்கள் பல இருப்பதால் அதைப் புனித நகராக ஜப்பானியர் போற்று கின்றனர். தொழில் வளம் மிகுந்த ஜப்பானின் தலைநகரான டோக்கி யோவில் வாணிக நிறுவனங்கள் பெரும் எண்ணிக்கையில் அமைந் துள்ளன. கல்விக் கூடங்களும் தொழிற்பயிற்சி நிறுவனங்களும் பெரு மளவில் அமைந்துள்ளதால் நகரம் எப்போதும் நெரிசல் மிக்கதாக விளங் குகிறது. டோக்கியோ துறைமுகம் ஆழம் குறைந்ததாகும். இங்கு சிறுவகைக் கப்பல்களே வந்து செல்கின்றன. இங்குள்ள விமான நிலையத்திலி ருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக் கும் விமானங்கள் புறப்பட்டுச் செல் கின்றன. உலகிலேயே மிகவேக மாகச் செல்லக் கூடிய புல்லட் டிரெ யின் இரயில் வண்டிகள் அந்நகரிலி ருந்து நாடெங்கும் செல்கின்றன. தட்டெழுத்து: டைப்ரைட்டர் என அழைக்கப்படும்தட்டெழுத்துப் பொறி 171 இன்றைய வாழ்வின் இன்றியமையா அங்கம் ஆகும். தட்டெழுத்துப்பொறி யில் இன்று பலவகைகள் உள்ளன. அலுவலகங்களில் பயன்படும் பெரிய தட்டெழுத்துப் பொறி, எளிதாக செல் லும் இடம் எல்லாம் எடுத்துச் செல் லத்தக்க சிறிய தட்டெழுத்து பொறி, மின் விசையால் இயங்கும் மின் தட் டெழுத்துப் பொறி எனப் பலவகை கள் உள்ளன. கண்பார்வை இழந்த வர்களுக்குப் பயன்படும் தட்டெழுத் துப் பொறியும் உண்டு. இது பிரெய்ல் எனும் எழுத்தால் ஆனது. உலகி லுள்ள எல்லா மொழிகளிலும் தட் டெழுத்துப் பொறிகள் உண்டு. தட்டெழுத்துப் பொறி முதன் முத லில் அமெரிக்காவில் 1868ஆம் ஆண்டில் கிறிஸ்டபர் ஷோல்ஸ் என் பவர் கார்வோஸ் கிலிடன், சாமுவேல் சூல் ஆகியோரின் உறுதுணை யோடு உருவாக்கினார். காலப்போக் கில் பல்வேறு மாற்றங்களைப் பெற்று இன்றுள்ள வடிவங்களைத் தட் டெழுத்துப் பொறி பெற்றுள்ளது. தட்டெழுத்துச் செய்யப்பயன்படும்தட் டெழுத்தின் மேல் பகுதியில் ஒரு உருளை உண்டு. இதனை ஒட்டி சிறு இடைவெளி இருக்கும். இதனி டையே தாளைச்செருகி உருளையின் கைப்பிடியைத் திருகினால் தாள் உட் புகுந்து முன்புறம் வெளிப்பட்டு நிற் கும். தட்டெழுத்துப் பொறியின் முன் பகுதியில் வரிசையாக பொத்தான் அமைக்கப்பபட்டிருக்கும். அப்பொத் தான்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு எழுத்தாகும். அவ்வெழுத்துப் பொத் தானை அழுத்தினால் அதனோடு உள்ள அச்செழுத்து முன்னால் உள்ள மை தடவிய நாடாவை அழுத் தும். நாடர் தாளின் மீது பதிய அச் செழுத்து மையோடு தாளில் பதியும்.