பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 அதுவரை வேதியியல் கலைச் சொற்களை அவரவர் விருப்பம்போல் பயன்படுத்தி வந்தனர். அக்கலைச் சொற்களை எல்லாம் முறைப்படுத்தித் தொகுத்தார். இக்கலைச் சொற்களே இன்றுவரை வேதியியல் அறிவியலா ளர்களால் பயன்படுத்தப்பட்டு வரு 4 லா வாசியர் கிறது. அதுவரை கண்டறியப்பட்ட வேதியியல் கொள்கைகளை எல்லாம் முறைப்படுத்தினார். இதன்மூலம் இவர் இன்று வேதியியலின் தந்தை' எனப் போற்றப்படுகிறார். ஃபிரெஞ் சுப் புரட்சியின்போது இவர் கொல் லப்பட்டார். அபிரகம்: இது மைக்கா அல்லது 'காக்காய்ப் பொன்' எனவும் அழைக் கப்படும் மினுமினுப்பான ஒன்றே அபிரகம் என்பதாகும். இது பூமியி லிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. இது கண்ணாடிபோல் ஒளி ஊடுரு வும் ஒன்று. இது மெல்லிய தகடுகளை அடுக்கி யதுபோன்று அடுக்கடுக்காக இருக் கும். இவற்றைத் தனித்தனியே பிரித் தெடுக்க இயலும். இது கண்ணாடி அம்மை நோய் போன்று வெண்மையாக இருக்கும். எளிதாக ஒளி ஊடுருவுவதால் கண் ணாடிக்குப் பதிலாக இதைப் பயன் படுத்தலாம். இதை வெப்பம் தாக்குவதில்லை. இதனால் இதை வெப்பம் மிகுதியாக உள்ள தொழிற்சாலைகளில் கண் ணாடிச் சன்னல்களாகப் பயன்படுத் தப்படுகிறது. இது எளிதில் உடை யாது. இதன் வழியாக மின்சாரம் பாய் வதில்லை. எனவே மின் சாதனப் பொருட்கள் தயாரிக்க அபிரகம் பெரி தும் பயன்படுகிறது. அலங்காரப் பொருட்களுக்குப் பூச பசைகளும், ஒருவகை மினுமினுப்பான காகிதம் தயாரிக்கவும் இது பயன்படுகிறது. அபிரகம் வெள்ளை, மஞ்சள் பழுப்பு, இளஞ்சிவப்பு, பச்சை, கறுப்பு என பல வண்ணங்களில் கிடைக்கின் றன. அவற்றின் நிறத்திற்கேற்ப இவற்றுக்குத் தனித்தனி பெயர்கள் உண்டு. . இதில் பொட்டாசியச் சத்து இருப்ப தால் பயிர் வளர்ச்சிக்கான வேதி உரம் தயாரிக்கவும் இது பயன்படுத் தப்படுகிறது. அம்மை நோய் தொற்று நோய் களில் இது மிகக் கொடிய நோய். இது கண்ணுக்குப் புலப்படாத நுண்ணு பிரிகளால் ஏற்படுகிறது. இந்நோய் தொற்றியவுடன் காய்ச்சல் வரும். ஒரு சில நாட்களுக்குள் உடம்பில் தோலின் மீதும் வாய், மூக்கு, கண் இவற்றின் சவ்வுகளின் மீதும் சின் னஞ்சிறு செம்புள்ளிகள் தோன்றும். $ இவை பின்னர் பெரிதாக ஆகும். இவை நீர்க் கொப்புளங்களாகவோ சீழ்க் கொப்புளங்களாகவோ காணப்