பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 ராகப் பணியாற்றினார். பின் எஞ்சிய காலத்தில் நியூயார்க் சென்று பணி யாற்றினார். 1889ஆம் ஆண்டு ஜூன் மாதம் மறைவெய்தினார். இவர் வலியுறுத்திய கோட்பாடு களில் 1. நல்வாழ்வே நன்மை பயக்க வல்லது’2.நல்வாழ்வு வாழவிரும்புகிற வன் மற்றவர்களும் நல்வாழ்வு வாழ உதவ வேண்டும். 3. நல்வாழ்வைப் பெறுவது இவ்வுலகில்தான். 4 இன்ப மாக வாழ்வதற்கான நல்ல காலமும் இதுவேதான். இங்கிலாந்து: ஐரோப்பாக் கண் டத்தின் வடமேற்கே அமைந்துள்ள பிரிட்டீஷ் தீவுகளின் பெரும்பகுதி. இங்கிலாந்து ஆகும். உலகப்படத்தில் பார்க்கும்போது அது மிகச் சிறிய நாடாகத் தோற்றமளிக்கும். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது’ என்ற பழமொழிக்கேற்ப இச்சிறு நாடு உல குக்கு வழங்கியவை ஏராளம். இன்று உலகம் முழுமையும் கற்றோ ரால் பேசப்படும் ஆங்கில மொழி இந் நாட்டின் தேசிய மொழியாகும். ஆங்கிலக் கால்வாங் Dms *. ம் இங்கிலாந்து நாடாளுமன்ற முறை, முடியாட்சியில் மக்களாட்சி, அரசியல் பண்பாடு, வமைப் வnை, உயர்ந்த இலக்கிய இங்கிலாந்து மரபு, தொழில் வளர்ச்சி, புதியபுதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆகிய இவ்வனைத்தும் இங்கிலாந்து உல குக்கு வழங்கியவைகளாகும். இங்கிலாந்து வேல்ஸ், ஸ்காட் லாந்து,வட அயர்லாந்து ஆகிய பகுதி கள் இணைந்ததே ஐக்கிய அரசு’ தெற்கில் ஆங்கிலக் கால்வாய், கிழக் கில் வடகடல், வடக்கில் ஸ்காட் லாந்து மேற்கில் ஐரிஸ் கடல், அட் லாண்டிக் பெருங்கடல் ஆகியவற் றால் சூழப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் மொத்தப் பரப்பளவு 2,44,046 (1983) ச. கி. மீ. மக்கள் தொகை சுமார் ஐந்தரைக் கோடி. இந்நாட்டின் வடமேற்குப் பகுதி மேட்டு நிலமாகும். தென் கிழக்குப் பகுதி தாழ்ந்த நிலப்பகுதிகளைக் கொண்டதாகும். ந டு ப் பகு தி யி ல் பென்னைன் எனும் மலைத் தொடர் அமைந்துள்ளது. செவர்ன், நைன், எனும் ஆறுகள் ஓடினாலும், தேம்ஸ் ஆறே மிகப் பெரிய ஆறாக அமைந் துள்ளது. இந்நாட்டில் இயற்கைத் துறை முகங்கள் பல உள்ளன. இந்நாட்டில் கிடைக்கும் இயற்கை வளங்களில் தலையாயது நிலக்கரி ஆகும். இரும்பு, பெட்ரோல், நிலவாயு போன்றவை போதிய அளவு கிடைக் கின்றன. இங்கு பருத்தி, கோதுமை, பார்லி போன்ற உணவுப் பொருள் கள் பெருமளவு விளைகின்றன. மேச்சல் பகுதிகளாக சமவெளிகள் பெருமளவில் கிடைப்பதால் பண் ணைத் தொழில் சிறப்பாக வளர்ந் துள்ளன. வட கடலிலும் ஐரிஸ் கடலி லும் நிறைய மீன்கள் பிடிக்கப்படு கின்றன. இங்கிலாந்தின் தலைநகரம் லண் டன் ஆகும். இங்கே வரலாற்றுப் புகழ் பெற்ற நாடாளுமன்றக் கட்டிடம்.