பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 காந்தியடிகள் தொடங்கினார். காந்தி யடிகளும் அவரோடு இணைந்து நின்ற நேரு, படேல், ஆசாத். போன்ற எல்லோரும் சிறையிலடைக் கப்பட்டனர். மக்கள் பெருந்துன்பத் துக்கு ஆளாயினர். விடுதலைப் போராட்ட வீரரான சுபாஸ் சந்திரபோஸ் சிங்கப்பூர் சென்று இந்திய தேசிய ராணுவம்' எனும் பெயரில் ராணுவப் படை ஒன்றை அமைத்தார். இப்படையின் உதவிகளுடன் பிரிட்டீசாரை எதிர்த் துப் போரிடலானார். இச்சமயத்தில் முஸ்லிம் லீக் தலை வர் ஜின்னா முஸ்லிம்களுக்கெ தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையைக் கிளப்பினார். இரண்டாம் உலகப்போர் 1945ஆம் ஆண்டில் முடிவுற்றது. இந்திய மக் களிடையே விடுதலை வேட்கை காட் டாற்று வெள்ளம்போல் கரைபுரண்டு ஒடலாயிற்று. இனியும் இந்தியாவில் தொடர்ந்து ஆட்சி செய்ய இயலாது என ஆங்கில ஆட்சி உணர்ந்தது. எனினும் இந்தியாவுக்கு விடுதலை வழங்கும் வகையில் ஆக்கப்பூர்வ மாகச் செயல்பட்டது. இங்கிலாந்தி லிருந்து வந்த மூன்று பிரிட்டிஸ் அமைச்சர்கள் இந்தியத் தலைவர் களோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதன் விளைவாக 1946இல் இந்தியாவுக்கென இந்தியத் தலைவர்களைக் கொண்ட இடைக் கால அரசு அமைந்தது. வடமேற்கு எல்லை மாநிலம், கிழக்கு வங்காளம், மேற்கு பஞ்சாப், சிந்து மாநிலம் ஆகியவற்றை ஒன் றாக இணைத்து முஸ்லிம்களுக்கென “பாகிஸ்தான் நாட்டை உருவாக்கி னர். மற்றைய பகுதிகள் இந்திய தெற்கே இந்தியா நாடு என்ற பெயரில் அமையலா யிற்று. 1947 ஆகஸ்ட் 15இல் இந்தி யாவுக்கு முழுச் சுதந்திரம் வழங்கப் பட்டது. 1950 ஜனவரி 26இல் ஆங்கில அரசாட்சி முற்றிலுமாக அகன்று இந்தியா முழுமையான குடி யரசு நாடாக உருவாயிற்று. முதல் குடியரசுத் தலைவராக ராஜேந்திர பிரசாத் அவர்கள் முதல் பிரதம அமைச்சராக பண்டித நேரு அவர் களும் பொறுப்பேற்றனர். இந்தியா இந்தியாவிற்குப் பார தம்’ என்ற வேறு பெயரும் உண்டு. ஆசியாவின் தென்பகுதியில் அமைந் துள்ள தீபகற்ப நாடாகும். உலகி லேயே மக்கள்தொகை மிகுந்துள்ள இரண்டாவது நாடு ஆகும். உலகில் உள்ள ஏழாவது பெரிய நாடு ஆகும். வடக்கே இமயமலைத் தொடரும், இந்தியப் பெருங்கடலும் கிழக்கே வங்காள விரிகுடாவும் மேற்கே அரபிக்கடலும் எல்லை களாக அமைந்துள்ளன. வடக்குத் தெற்காக இந்தியாவின் நீளம் 8,214 கி.மீ. கிழக்கு மேற்காக 2,988 கி.மீ. இந்திய நாட்டின் மொத் தப் பரப்பளவு 32,80,488 ச.கி.மீ. ஆகும். வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள அந்தமான், நிக்கோ பார் தீவுகளும் அரபிக்கடலில் உள்ள இலட்சத் தீவுகளும் இந்தியாவின் பகுதிகளாகும். - இந்தியாவின் வட எல்லைகளாக உள்ள இமயமலை உலகின் மிகப் பெரும் மலைத் தொடராகும். சுமார் 5 இலட்சம் கி.மீ. பரப்பில் இம்மலைத் தொடர் படர்ந்துள்ளது. உலகிலே மிக உயரமான மலை உச்சியான எவரெஸ்ட் சிகரம் இம்மலையில்தான் உள்ளது. அதன் உயரம் 8,850 மீட் டருக்கும் அதிகமாகும். இதேபோன்று