பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-இந்தியா பத்துக்கு மேற்பட்ட பெரும் மலைச் சிகரங்களும் இமயமலைத் தொடரில் உள்ளன. - இதேபோன்று இந்தியாவின் நடுப் பகுதியில் ஆரவல்லி, விந்திய, சாத் பூரா மலைத் தொடர்கள் உள்ளன. தென்னிந்தியாவில் கிழக்கே,கிழக்குத் தொடர்ச்சி மலையும் மேற்கே கட லோரமாக மேற்குத் தொடர்ச்சி மலை யும் உள்ளன. இவ்விரண்டு மலைத் தொடர்களும் நீலகிரிப் பகுதியில் ஒன்றிணைகின்றன. மலைகள், குன்றுகள்,சமவெளிகள், பீடபூமிகள்,பாலைவனங்கள் போன்ற எல்லா வகையான நில அமைப்பு களையும் கொண்டது இந்தியா. இமயமலைக்கும் விந்திய மலைக் கும் இடைப்பட்ட நிலப்பகுதியை கங்கை, சிந்துச் சமவெளி என்பர். விந்திய மலைக்குத் தெற்கே உள்ள நிலப்பகுதி தக்காணம் என அழைக் கப்படும். இந்தியச் சமவெளிப் பகுதிகளை வளமூட்டுவது அந்நிலப் பகுதிகளில் ஒடும் வற்றாத ஆறுகளாகும். வட இந்தியாவில் சிந்து, கங்கை, பிரம்ம புத்திரா, மற்றும் அவற்றின் கிளை நதிகள் ஒடுகின்றன. மத்திய இந்தியா வில் மகாநதி, தபதி, நருமதை முத லான ஆறுகள் பாய்கின்றன. தென் இந்தியாவில் கோதாவரி, கிருஷ்ணா, வடபெண்ணை, தென்பெண்ணை, பாலாறு, காவேரி, வைகை, முதலான ஆறுகள் ஒடி செழிப்பூட்டுகின்றன. இந்தியாவில் உள்ள தார்பாலை வனம் வடமேற்குப் பகுதியில் அமைந் துள்ளது. இங்கு லூனி எனும் ஒரே ஒரு ஆறு ஒடுகிறது. இப்பகுதியில் உப்பு ஏரிகளும் உள்ளன. அவற்றுள் சாம்பல் எனும் ஏரி முக்கியமான 75 இந்தியா பலவகையான தட்ப வெப்ப நிலைகளையுடையது. இமய மலை பனிபடர்ந்த பகுதியாகும்.தென் னிந்தியா வெப்பம் மிகுந்ததாகும். வட இந்தியா மிதவெப்பப் பகுதியா கும். உலகிலேயே மிக அதிகமாக மழை பெய்யும் "சிரபுஞ்சி' மேகாலயா மாநிலத்தில் உள்ளது. இந்தியாவில் மழை பெய்வதற்குக் காரணம் பருவக் காற்றுகளாகும். ஜூன், ஜூலை மாதங்களில் வீசும் தென்மேற்குப் பருவக்காற்றால் தென் னகம், இமயமலைச் சாரல் மற்றும் அச்ாம் மலைப்பகுதிகள் மழைபெறு கின்றன. அக்டோபர், நவம்பர். டிசம் பர் மாதங்களில் வீசும் வடகிழக்குப் பருவக்காற்றால் இந்தியாவின் தென் பகுதிகள் பெருமழை பெறுகின்றன. இந்தியாவில் மலைகளும் காடு களும் மிகுதி. இங்கு மரங்கள் நிறைய உள்ளன. இவை கட்டிடங்களுக்கும் பல்வேறு வகையான மரச் சாமான் கள் செய்யவும் பயன்படுகின்றன. சந்தனம் போன்ற மணம் மிக்க வாசனை மரங்களும் சின்கோனா போன்ற மருந்துக்கான மரங்களும் வளர்கின்றன. மற்றும் ரப்பர் மரங் களும், கடுக்காய், நெல்லி போன்ற பயன்மிகு மரங்களும் விளைகின்றன. மலைச்சரிவுகளில் காபி, தேயிலை, ஏலம் போன்றவை ஏராளமாக விளை கின்றன. தென்னிந்தியாவில் ஏலம், ஜாதிக்காய், இலவங்கம் போன்ற மணப் பொருட்களும் மிளகும் நிறைய விளைகின்றன. சமவெளிப் பகுதிகளில் ஆற்றுப் பாசனத்தின் மூலம் குளம், ஏரி, கிணறு போன்றவற்றின் துணையோ டும் வேளாண்மை தொழில் பெரு மளவில் நடைபெறுகின்றன. இந்திய