பக்கம்:சிற்றம்பலம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றம்பல்ம் 9

நமக்குக் கிடைக்குமா? என்ற ஏக்கம் உண்டாவது இயல்பு. மறையும் பல்தேமும் பாடுகின்ருன் என்பதை அறிந்தால் நமக்கு அரியன் என்ற எண்ணம் பின்னும் வலிமை பெறுகின்றது. ஆனல் அவன் சந்திரனே ஏற்றுக்கொண்ட வன், அவனுடைய தொல்வினை சுருங்க அருளியவன் என்பதை நினைக்கும்போது, அவனுடைய கருணையை எண்ணி வியக்கத் தோன்றுகிறது. நமக்கும் அருள் செய்வான்; பிறவிதோறும் கம்மைத் தொடர்ந்து வரும் பழவினைகள் சுருங்கும்படி அருள்வான்' என்ற நம்பிக்கை -யும் உடனே உண்டாகிறது.

பல்ச டைப்பனி கால்கதிர் வெண்திங்கள் சூடி ய்ை;அரு ளாய் சுருங்களம்

தொல்வினையே.

(பலவாகிய சடையினிடையே பனியை வெளிப்படுத்துகின்ற கதிரை யுடைய வெண்மையாகிய பிறையைச் சூடிய்ை அடி. யேங்களுடைய பழவினை சுருங்கி கையும்படி அருள்வாயாக.

கால் - வெளிவிடும். கதிர் - கிரணம். கிங்கள் - இங்கே பிறை. சுருங்க - குறைந்து அழிய தொல்வினை - பழவினை.)

சந்திரமெளளிசுவரனுக்கு நடைபெறும் பூசை கண்டு முதலில் அவன் பெருமையை எண்ணினர் சம்பந்தர்; அப்பால் அவன் திருநாமத்தைக் கேட்டு அவன் கருணையை நினைந்தார். மற்ற மக்களுக்கெல்லாம் பிரதிநிதியாக கின்று இறைவனிடம் விண்ணப்பித்துக் கொள்கிருர்; ஆதலால், "சுருங்களம் தொல்வினையே’ என்ருர். தமக்கு ஒரு வினே யும் இன்றி ஞானமயமாய் நின்ற திருஞான சம்பந்தர், இறைவன் வெண்திங்கள் சூடியமையை கினேப்பூட்டி அவனது கருணையைக் குறிப்பிக்கிருர், எம் தொல்வினே' - * பழவினைகள் பாறும்விண்ணம், சித்தமல மறுவித்து.'

(திருவாசகம்.) .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/19&oldid=563162" இலிருந்து மீள்விக்கப்பட்டது