பக்கம்:சிற்றம்பலம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றம்பலம்

பிள்ளையார் அதனைத் தம் தங்தையாரிடம் கொடுத்தார். அப் பெரியார் அக்கிழியைப் பெற்றுச் சென்று சீகாழியில் தாம் செய்ய வேண்டிய வேள்வியைச் செய்து கிறைவேற்றினர்."

இறைவன் திருஞான சம்பந்தருக்கு ஆயிரம் பொன் அளித்த இந்த அருட்செயலைத் திருநாவுக்கரசு காயனர்,

'மாயிரு ஞால மெல்லாம் மலரடி வணங்கும் போலும்

பாயிருங் கங்கை யாளைப் படர்சடை வைப்பர் போலும் காயிரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல ஊார்க் கம்பொன் ஆயிரங் கொடுப்பர் போலும் ஆவடு துறைய ேைர'

என்று பாராட்டியிருக்கிரு.ர்.

சம்பந்தர் தமக்கு வேண்டிய பொருளே வேறு யாரிடத்தும் சென்று இரக்கும் தன்மை இல்லாதவர். அவருக்கு வேண்டிய பண்ட்ங்கள் அவ்வப்போது இறைவன் திருவருளால் கிடைத்துக்கொண்டே இருந்தன. அதனல் தமக்கு ஒன்றும் குறைவில்லாமல் இறைவன் எழுந்தருளி யிருக்கும் தலங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தார். இப்போது தந்தையார் பொருள் வேண்டுமென்று கேட்ட போதுதான் தம் கையிலே பொருள் ஒன்றும் இல்லை என்பதை உணர்ந்தார் சம்பந்தர். அதுகாறும் பொருள் இல்ல்ாத குறையை உணரும் வாய்ப்பு வரவில்லை. பண்டங் கள் யாவும் கிடைத்துக்கொண்டே இருந்தன. அப்பண்டங் க்ளை அடியார்களுக்கெல்லாம் பயன்படுத்தி இன்புற்ருர், தனியே பணம் என்ற ஒன்று அவசியம் இல்லாமலே இருந்தது. நாணயம் அதிகமாக வழங்காத காலம் அது. கெல் இருந்தாம் போதும்; எல்லாப் பொருள்களையும் பெறலாம். - -

  • பெரியபுராணம், திருஞான. 421.480 "சண்பை கைக்கோர், ஆயிரம் பொன்னருள் சொன்னத் தியாகர்' (திருவா வடுதுறைக் கோவை, 324.) . .
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/22&oldid=563165" இலிருந்து மீள்விக்கப்பட்டது