பக்கம்:சிற்றம்பலம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கும் அங்கும் 27

பெண்ணுமாக இல்லறம் கடத்தும் மக்கள் அப் பெருங் தகையை வணங்கினுல் நல்ல வண்ணம் வாழலாம். தினங் தோறும் இடையூறின்றி இறைவன் திருவருளால் கல் வாழ்வு அமையும். இம்மை வாழ்விலே நன்மை உறுவ தோடு அம்மையிலும் கல்ல கதி உண்டாகும். அதற்குச் சிறிதேனும் குறைவு இராது. "இந்த உலகில் இன் பங்களைத் துய்த்தான்; ஆதலின் மறுமையில் கொஞ்சம் குறைவாக இன்பம் அருள்வோம்” என்ற கணக்கு இராது. இங்கும் கல்ல வண்ணம் வாழலாம்; அங்கும் குறைவிலா இன்பம் துய்க்கலாம்.

மண்ணில் நல் லவண்ணம் வாழலாம் வைகலும்

எண்ணின் நல் லகதிக்கு யாதுமோர் குறைவிலே.

(பூவுலகில் நல்லபடி நாள்தோறும் கல்வாழ்வு வாழலாம். ஆராய்ந்து பார்த்தால் மறுமையில் நல்ல கதிக்குச் சிறிதளவும் குறைவு இல்லே.

மண் - சிலவுலகம். நல்ல வண்ணம் வாழ்வது, இடையூறின்றி இன்ப வாழ்வு பெறுவது, வைகலும் நாள்தோறும். வைகலும் வாழலாம் என்று கூட்டுக. நல்ல கதி.முத்தி. யாதும் சிறிதும்.)

- 女

இறைவனை வழிபடுவோர் பெண்ணேத் துறந்து துறவு பூண்டு உலக வாழ்வில் வரும் இன்பங்களே அடையாமல் தான் வாழவேண்டும் என்ற கியதி இல்லை. இறைவன் பெண்ணினல்லாளோடு எழுந்தருளி யிருத்தலின் நாமும் பெண்ணுேடும் அறநெறியில் அப் பிரான வழிபட்டு வாழலாம். அந்த வாழ்க்கையில் குறைவு நேராது. நல்ல வண்ணம் வாழலாம். வையத்துள் வாழ்வாங்கு வாழலாம். இம்மையின்பம் குறைவின்றிக் கிடைப்பதோடு மறுமை யின்பமும் கிடைக்கும்."

  • 'இம்மை யேதரும் சோறுங் கூறையும் ஏத்த லாம்இடர் கெடலுமாம், அம்மை யேசிவ லோக மாள்வதற் கியாதும் ஐயுற வில்லையே. (சுந்தார் தேவாரம், கிருப்புகலூர்)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/37&oldid=563180" இலிருந்து மீள்விக்கப்பட்டது