பக்கம்:சிற்றம்பலம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞான மலர்

என்ன அதிசயம்! இவ்வளவு பெரிய யானே கையிலே ஏதோ தழைக் கொத்தை எடுத்துப் பெருக்குகிறது. பெண் யானேயென்று தெரிகிறது. கீழே கிடக்கும் கல் முதலிய வற்றைப் பொறுக்கி எறிகிறது. எங்கும் நீரைத் தெளித்துச் சுத்தம் செய்கிறது. அறிவுடைய மக்கள் கூட இவ்வளவு கன்ருக கிலத்தைப் பெருக்கிச் சுத்தஞ் செய்ய மாட்டார்களே !

இந்த மடப்பிடி தன் வலிய கையில்ை இவ்வாறு அல கிடக் காரணம் என்ன? இதோ பெரிய களிறு வருகிறதே ! காட்டிலே வாழும் யானைகளில் இவ்வளவு பெரியதை எங் கும் காணமுடியாது. மனிதர்கள் ஏவாமலே மிக அமைதி யாக வருகிறது. ஒரு பெரிய சிவலிங்கம் போன்ற கல்லேக் கொணர்ந்து வைக்கிறது. தன் துதிக்கையினுல் நீர் கொணர்ந்து அபிஷேகம் செய்கிறது. இலையும் பூவும் கொண்டுவந்து அருச்சனே செய்கிறது. இந்தக் களிறும் பிடியும் சிவ பூசை செய்ய எங்கே கற்றுக்கொண்டன? தம் மனைவி பூசைக்கு இடம் பண்ண, அங்கே இருந்து சிவ பக்தர் ஒருவர் சிவ பூசை செய்வதுபோல் அல்லவா இருக் கிறது இந்தக் காட்சி? -

காட்டிலே வாழும் யானை, மதம் பிடிக்கும் யானையாகிய இது வழிபடுகிறதற்கு இந்தக் கரியின் இயல்பு காரணமா? அல்லது இந்த இடத்தின் சிறப்புக்காரணமா? இரண்டும். இருக்கலாம். இந்த இடம் சிறப்புடையது என்பதில் தடையே இல்லை. திருக்கானப்பேர் என்னும் தலம் இது. இங்குள்ள ஆலயத்தில் அறிவுடைய மக்கள் பூசை புரிகின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/39&oldid=563182" இலிருந்து மீள்விக்கப்பட்டது