பக்கம்:சிற்றம்பலம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரறறுங்கள

மதுரைக்கு வடக்கே உள்ளது திருவேடகம் என்னும் திருத்தலம். வையைக் கரையில் அமைந்திருப்பது அது. திரு ஞானசம்பந்த மூர்த்தி காயனர் சமணரோடு வாதுசெய்த போது, வாழ்க வந்தனர்” என்று தொடங்கும் திருப் பாசுரத்தை எழுதியிட்ட ஏடு வையையில் எதிரேறிச் சென் றது. அதனைத் தொடர்ந்து பாண்டியனுக்கு மந்திரியாக இருந்த குலச்சிறையார் குதிரையின்மீது ஏறிச் சென்ருர். அப்போது சம்பந்தர், 'வன்னியும் மத்தமும்” என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடியருள, ஆற்றிலே சென்ற ஏடு இந்தத் தலத்துக்கு அருகில் ஒதுங்கியது. அதனைக் குலச்சிறையார் எடுத்து வந்து யாவருக்கும் காட்டினர். ஏடு சென்று அண்ந்ததாதலின் எடகம் ஆயிற்று. இந்தத் தலப்பதிகத்தின் திருக்கடைக் காப்பில்,

கோடுசந் தனம்அகில் கொண்டிழி வைகைநீர் ஏடுசென் றணதரும் ஏடகத் தொருவன நாடுதென் புகலியுள் ஞானசம் பந்தன. பாடல்பத் திவைவல்லார்க்கு இல்லையாம் பாவிமே என்று ஆளுடைய பிள்ளையார் பாடுகிருர்,

இப் பதிகத்தின் ஏழாம் பாடல் இப்போது கிடைக்க வில்லை. இங்கே விளக்கத்துக்கு வருவது ஆரும் பாடல்.

★ g திருவேடகம் வையை யாற்றின் கரையில் இருப்பது ஆதலால் நீர்வளமும் நிலவளமும் சிரம்பியது. ஆற்றினல் அழகுபெற்ற இந்தத் திருப்பதிக்கு வேறு அழகுகளும்

  • பெரிய புராணம், கிருதான. 848-851.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/47&oldid=563190" இலிருந்து மீள்விக்கப்பட்டது