பக்கம்:சிற்றம்பலம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்டு. ஏடகத்தில் அழகிய பொய்கைகள் இருக்கின்றன. நீர் கிரம்பிய பொய்கைகள் அவை. அங்கங்கே பூம்பொழில் கள் வானளாவ ஓங்கி வளர்கின்றன. மலர்களில் ஒவ்வொரு பருவத்திலும் மலர்பவை உண்டு. அப்படியே ஒவ்வொரு போதிலும் மலர்வன உண்டு. இந்தப் பொழில்களில் எல்லா வகையான மரஞ் செடி கொடிகளும் இருப்பதனால் எந்தப் பருவமானலும் எந்த நேரமானலும் அப்போது மலருகின்ற புது மலர்கள் பல அங்கே இருக்கின்றன. எனவே புதிய மலர்களை எப்போதும் அந்தப் பொழிலில் காணலாம்.

தென்றற் காற்று வீசும்போது பொய்கையில் வீசித் தண்மை அளாவி வரும். அப் பொய்கையில் மலர்ந்த மலர் களின்மேல் வீசிவரும். பொழிலிலே புகுந்து வரும். அங்கே மலர்ந்த புது மலர்களிலே அணேந்து வரும். இயல்பாகவே மென்மையை உடைய தென்றல், பொய்கையிலும் பொழிலி லும் பூக்களிலும் புகுந்து வருதலால் தண்மையும் மணமும் பெற்று மெல்ல வீசுகிறது. அப்படி வீசுகிற இடம் ஏடகம். வைகையின் வடகரை மருவியது அத்தலம்.

திருவேகடத்திலே எழுந்தருளியிருக்கிருன் இறைவன். நமக்கு ஏதேனும் துன்பம் வரும்போது அது சிறிதால்ை பொறுத்துக்கொள்கிருேம் பெரிதானல் வருந்துகிருேம். அதன் அளவு மிகுதியாக ஆக நம்முடைய வருத்தமும் அதிகமாகிறது. வருத்தம் மிகுதி ஆக ஆக அதை வெளிப் படுத்தும் வகையும் மிகுதியாகிறது. முகம் சிணுங்குகிருேம். பிறகு உடம்பு துடிக்கிறது. அப்பால் முணுமுணுக் கிருேம். பின்பு அழுகிருேம். அதற்குமேல் அரற்றுகிருேம். அந்தத் துன்பத்தை யாராவது நீக்குவார் என்ற எண்ணம் உண்டானல் அவரிடம் போய் அரற்றுகிருேம்;அவர் காலில் விழுந்து அரற்று கிருேம். . . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/48&oldid=563191" இலிருந்து மீள்விக்கப்பட்டது