பக்கம்:சிற்றம்பலம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோதிக்க வேண்டாம் 79

வந்து சாருங்கள் ; இறைவனேயே சாருங்கள். சாதுக்களாக உலகத்தில் மிகுதியாக இருக்கும் மக்களே வாருங்கள் ' என்று அழைக்கிருர் அருட்பாலமுதுண்ட தெருட் பாவலர். -

சாதுக்கள் மிக்கிர் ! இறையே வந்து சார்மின்கனே. (சாதுக்களாக மிக்கிருக்கின்றவர்களே ! பிறரைச் சாராமல் இறைவனேயே வந்து அடையுங்கள்.

சாதுக்கள் - கன்னெறி செல்ல விரும்பும் அன்பர்கள். மிக்கீர் - மிகுதியாக உள்ளவர்களே. இறையே - இறைவனேயே ; ஏகாரம் வேறு இடங்களைச் சாராமல் இவனேயே சாருங்கள் என்ற பொருளில் வந்தது ; பிரிகில். சார்மின்கள் - அடையுங்கள். சார்மின் என்ருலே போதும் : கள் விகுதி மேல் விகுதி. : அசை கிலே.) - - w

இந்த அடிக்குச் சேக்கிழார் பெருமான், வேண்டு கின்ற வேட்கைக்குரிய பொருள்கள் எல்லாவற்றையும் இறைவனுடைய பாதத்தில் பூண்ட அன்பினலே பெற்றுப் போற்றுகின்றவர்களே, வந்து அடையுங்கள்" என்று உரையருளினர். -

ஈண்டு சாதுக்கள் என்றெடுத் தோதிற்று ; வேண்டும் வேட்கைய எல்லாம் விமலர்தாள் பூண்ட அன்பினிற் போற்றுவீர், சார்மின்கள் என்று ஆண்ட சண்பை அரசர் அருளினுள்.' நல்ல நெறியிலே செல்லவேண்டும் என்ற உள்ளம் பட்ைத்த சாதுக்களைப் பார்த்துச் சொல்லுகிருர் சம்பந்தர்; 'நீங்கள் ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் வேண்டிய அளவுக்கு மேலே சோதிக்கவேண்டாம். இறைவன் மூலப் பெருஞ் சோதியாகி அகத்தும் புறத்தும் விளங்கி இருள் பெரிய கிருஞான, 837. ஒசிற்று - ஒகியது. வேட்கைய. வேட்கைக்குரியவை. அன்பினிற் போற்றுவீர் - அன்பிளுலே பெற்றுப் போற்றுபவர்களே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/89&oldid=563232" இலிருந்து மீள்விக்கப்பட்டது