உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

அளித்தனர். மாதவிக்கு ஆடல் பயிற்றுவித்த ஆடல் ஆசிரியனும் அங்கு இருந்தான். அவையினர் இமை கொட்டாது மாதவி வருகையை எதிர் நோக்கினர்.

அரங்கேற்றம்

நடிப்புக்கேற்ற நேரம் வந்தது. பேரழகியான மாதவி அவையோர் கண்டுகளிக்க மேடைமீது தோன்றினாள்; பலவகை இன்னிசை வாத்தியங்கள் ஒலித்தன: இசையாசிரியர் இனிய குரல் எடுத்துப் பாடினர்; மாதவி ஒழுங்குமுறை தவறாது கண்டார் வியக்குமாறு அற்புதமாக நடனம் செய்தாள். அவள் ஆடிக் காட்டிய நடன வகைகளைக் கண்ணுற்ற அவையோர் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.

நடன அரசி

சோழர் பெருமான் எழுந்து மாதவியின் நடனத் திறமையைப் பாராட்டிப் பேசி, ‘நடண் அரசி’ என்பதற்கு அடையாளமான ‘தலைக்கோல்’ என்ற மணிகள் பதித்த கோல் ஒன்றை அவளுக்குத் தந்தான்; ஆயிரத்து எண் கழஞ்சு பொன்னையும் பரிசாக அளித்தான்; பசும்பொன் மாலை ஒன்றையும் பரிசளித்தான். யாவரும் மாதவியின் நடனச் சிறப்பைப் பாராட்டி மகிழ்ந்தனர். அன்றுமுதல் மாதவி ‘நடன அரசி’ என மாநகரத்தாரால் பாராட்டப்பட்டாள்.


5. கோவலனும் மாதவியும்

கோவலன் மனமாற்றம்

அரங்கேற்றம் நடந்த அன்று மாலை கோவலன் கடைத்தெருவில் தன் நண்பர்களுடன்