பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

51


மதுரை மனக்கலக்கம்

மதுரை மாநகரத்தில் வாழ்ந்த பத்தினிமாரும் சான்றோரும் கண்ணகியின் பொறுத்தற்கு அருமையான துன்ப நிலையைக் கண்டு கண்ணிர் உகுத்தனர்; “ஐயோ, இவள் மிக்க இளம் பெண்; செல்வச் சீமான் மகளாகக் காண்கிறாள்; நற்குடிப் பிறப்புடையவள் போலக் காண்கிறாள். இவளுக்கு இக்கொடுமை இழைக்கப்பட்டதே! பாண்டியன் நெறி தவறாதவன் அல்லவா? அவனது வளையாத செங்கோல் வளைந்ததே! என்னே ஊழ்வினை இருந்தவாறு!” என்று கூறி மனம் வருந்தினர்.

கொலைக்களக் காட்கி

இங்ஙணம் மாநகர மக்கள் மனம் பதறக் கண்ணகி தெருத் தெருவாகப் புலம்பிச் சென்றாள்; முடிவில் தன் கணவன் கொலையுண்ட இடத்தைக் குறுகினாள்; தன் ஆருயிர்க் காதலனது உடல் இரத்த வெள்ளத்தில் படிந்திருக்க கண்டாள். அந்தோ! அவனது ஆவியற்றவுடலைக் கண்டாள் ஆனால், கோவலன் தன் காதலியின் சோக நிலையைக் காணவில்லை. அந்த நேரத்தில் கண்ணகியின் துயரை நேரிற்காணப் பெறாதவனாய்க் கதிரவன் மேல் திசையில் மறைந்தான்; அதனால் எங்கும் இருள் சூழத் தலைப்பட்டது.

கொலைகளத்தில் கண்ணகி

கண்ணகி, கணவன் உடலைக் கண்டு, நீர் எனது துயரத்தைக் காணவில்லையா? உமது மண மிக்க நறுமேனி மண்ணிலும் இரத்தத்திலும்