பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

அத்தகைய பாண்டியன் - மரபில் வந்தவன் இந்த நெடுஞ்செழியன்.

சோதிடம் பலித்தல்

‘இந்த நகரம் இந்த ஆண்டு ஆடிமாதம் கிருஷ்ணபக்ஷம் கார்த்திகை-பரணி பொருந்திய எட்டாம் நாளாகிய வெள்ளிக்கிழமை அன்று தீப்பிடித்து அழியும்; அரசனும் அழிவான்’ என்பது சோதிடமாகும். அது மெய்யாயிற்று. உங்கட்கு இக்கேடு வந்ததற்குக் காரணம் கூறுவேன், கேட்பாயாக.

முன்வினை

“பல ஆண்டுகட்கு முன் கலிங்க நாட்டுச் சிங்கபுரத்தில் வசு என்பவனும் கபிலபுரத்தில் குமரன் என்பவனும் ஆண்டு வந்தனர். அவர்கள் தம்முள் ஓயாது போரிட்டு வந்தனர். நகை வியாபாரி ஒருவன் தன் மனைவியுடன் சிங்கபுரத்திற்குச் சென்று வியாபாரம் செய்து வந்தான். அவன் மீது பொறாமை கொண்ட பரதன் என்பவன். அவனைப் ‘பகை அரசனது ஒற்றன்’ எனத் தன் அரசனைக் கொண்டு கொல்லச் செய்தான் - அவ்வணிகன் மனைவியான நீலி என்பவள் ஊர் முழுவதும் சுற்றிப் புலம்பினாள்; கணவன் இறந்த பதினான் காம் நாள் ஒரு மலைமீது ஏறி இறக்கத் துணிந்தாள். அப்பொழுது அவள் ‘எமக்கு இப்பிறப்பில் இத்துன்பம் செய்தவர் மறுபிறப்பில் இதனையே அநுபவிப்பாராக!’ என்று சபித்து இறந்தாள். அவள் இட்ட சாபமே இப்பிறப்பில் உங்களைப் பற்றியது; அவள் கணவனைக் கொல்வித்த பரதனே உன் கணவனான கோவன்; கொல்லப்-