பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊர்சூழ்வரிக் காதையில்

90


இளங்கோவடிகள் காலத்தில் தமிழகம் சுதந்திரமான மூன்று நாடுகளாக மூவேந்தர்களின் வீரத்தின் சின்னங்களாக அறவழி ஆட்சிகளாக விளங்கிக் கொண்டிருந்தன. பாரதி காலத்திலோ, பாரதம் முழுவதுமே ஆங்கிலேய அன்னியக் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் அடிமைப்படுத்தப்பட்டு அல்லலுற்று அமுங்கியிருந்தது.

மதுரை மக்கள் மனம் குமுறி மன்னன் பிழையைக் கண்டித்தார்கள். கண்ணகி அரசியல் பிழை செய்த மன்னனை எதிர்த்து வழக்குரையாடி, தனது கற்பின் வலிமையாலும் மக்கள் துணையுடனும் மதுரையை எரித்தாள். பாஞ்சாலியோ, கண்ணன் கருணையால் தன் மானத்தைக்காத்து “தர்மத்தின் வாழ்வதனை சூதுகவ்வும் இன்று கட்டுண்டோம், பொருத்திருப்போம் காலம் வரும்” என்று கட்டுண்டு பொருத்திருந்து உரிய காலத்திற்காகக் காத்திருந்தாள். சூழுரைத்து அவிழ்ந்த கூந்தலை முடிக்காமல் காலம் வரும் வரை காத்திருந்தாள். கண்ணகி, பாஞ்சாலி இருவரும் அநீதியையும் அக்கிரமத்தையும், அரசியல் பிழையையும் எதிர்த்து நின்றார்கள்.

இளங்கோவடிகளும் பாரதியும் நமது பாரத புண்ணிய பூமியின் மரபு வழியில் நின்று அநீதியையும் அக்கிரமத்தையும் அரசியல் பிழையையும் எதிர்க்க மக்களுக்கு தேவையான நெறிமுறைகளையும் வழிகாட்டுதல்களையும், நம்பிக்கையையும் தங்கள் காவியங்கள் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

இளங்கோவடிகள் மதுரை மக்களின் இயல்பான உள்ளக்குமுரலையும் நியாய உணர்வையும் வெளிப்படுத்திக் காட்டியுள்ளார். பாரதியோ அத்தினாபுரத்து மக்களின் பெட்டைப் புலம்பலைக் கண்டித்தும் நிந்தித்தும், பாரத நாட்டு மக்களின் தன் மானத்தையும் வீரத்தையும், கடமையையும் தட்டி எழுப்பி விடும் வகையில் வேகமூட்டி அடிமைத்தனத்திற்கெதிரான விடுதலைப் போராட்டத்திற்குத் தூண்டுதல் செய்தார். இருபெரும் கவிஞர்களும் காலத்திற்கேற்ற வகையிலும் காலத்தின் தேவைக் கேற்ற