பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள் அ.சினிவாசன்

123


கொண்ட வள்ளியின் குலமான எங்கள் குறவர் குடியிலே பிறந்த மகளிரின் நிலையை உயர்த்தும் உயர்ந்த மேலான கடவுளே, எங்கள் காதலர் எங்களை ஊரறிய மணக்கும்படி அருளுக என்று உனது இரு திருவடிகளையும் வணங்குகிறோம்" என்று தொழுது வேண்டுவோமாக" என்றும்,

குறமகளான வள்ளி எங்கள் குல மகள், அவளோடும் சேர்ந்து ஆறுமுகங்களையுடைய உனது திருவடிகளையும் சேர்த்து வணங்குகிறோம். நீர் நிலைகளின் பக்கம் நின்று உனது திருவடிகளைத் தொட்டு வாக்குறுதி கொடுத்த எங்கள் காதலர் தங்கள் களவொழுக்கத்தை விட்டு ஊரறிய எங்களை மணந்து கொள்ள அருளுவாயாக என்று அவனைத் தொழுது வேண்டுவோமாக என்றெல்லாம் பாடி ஆடுகிறார்கள், மேலும்

நீ கடம்ப மலர் மாலை சூடி வேலினை ஏந்தி ஒரு மங்கையின் பொருட்டாக இவ்வூர் வருதல் காண்கிறோம். ஆனால் உனக்கு ஆறுமுகங்கள் இல்லை அழகிய மயில்வாகனம் இல்லை. உன்னருகில் வள்ளியில்லை. பன்னிரு தோள்கள் இல்லை. எனவே இவ்வூரார் உன்னை எங்கள் கடமையை ஏற்கும் தெய்வமாக எங்கள் அருமை முருகனாக உன்னை கருத மாட்டார்கள். ஆதலால் இவர்கள் அறிவில்லாதவர்கள் என்று கூறிவிட்டேன் என்று தலைவி குறிப்பிட்டுப் பாடுகிறார்கள்க் ஆடுகிறார்கள்.

இவ்வாறு குறமக்களின் குலக் கடவுளாகிய வேலவனைத் துதி செய்து பாடி பத்தினித் தெய்வமான கண்ணகியின் பெருமையையும் பாடினார் என்றவாறு சிலப்பதிகாரக்காப்பியம் தெரிவிக்கிறது. தமிழ்நாட்டில் முருக வழிபாடு தனிச்சிறப்பு கொண்டது. குன்று தோறும் முருகனையும், அதற்கு மணி முடியாக ஆறுபடை வீடுகளையும் கொண்டது முருகனது கோயில்கள். முருக வழிபாடு தமிழகத்தில் இந்து சமயமரபில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளதை நாம் நன்கு அறிவோம்.