பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள் அ.சினிவாசன்

9


சமுதாயத்தின் பயன்பாட்டிற்காகவும் உலக நலனுக்காகவும் செய்யப்பட்டனவேயாகும்.

இவ்வாறு மனிதனும், மனிதக்குழுக்களும் கூட்டங்களும் தொழில் செய்யும்போது அது தனக்காகவும், தங்களுக்காகவும், சமுதாயத்திற்காகவும், உலக நலனுக்காகவும் செய்வது என்பது, இயல்பாகவே அமைந்த ஒரு சமுதாய செயல்போக்காகவே அமைந்திருப்பதைக் காண்கிறோம். நவீன காலத்திய பல தொழில்களில் ஊதிய நோக்கம், லாப நோக்கம் ஆகியவை முக்கியமாக முன்வைக்கப்படுகின்றன. இந்த லாப நோக்கம், ஊதிய நோக்கம் என்பது தொழிலில் உழைப்பில் ஊக்கமளிப்பதற்காகவன்றி சமுதாய நலனை உலக நலனை உலைப்பதற்காக அல்ல. எனவே தான் ஒவ்வொரு மனிதனும் தொழில் செய்யும் போது அதனுடைய பலன்களைப் பற்றிக் கருதாமல் கவலை கொள்ளாமல் இடைவிடாமல் தொழில் செய்து கொண்டேயிருக்க வேண்டும் என்பதை கீதை வற்புறுத்துகிறது. அதன் பொருள் தொழில் செய்யும்போது எந்தவிதமான குறிக் கோளும் இல்லாமல் கண்ணை மூடிக் கொண்டு தனது தொழிலைச் செய்து கொண்டிருக்கவேண்டும் என்பதல்ல. போர்க்களத்தில் நின்று போர் செய்யும்போது எந்தவிதமான குறிக்கோளும் இல்லாமல் கண்ணை மூடிக்கொண்டு கணைகளை விட்டுக் கொண்டிருக்குமாறு கண்ணன் பார்த்தனுக்கு உபதேசம் கூறவில்லை. ஊசலாட்டம் இல்லாமல் உறுதியாக நின்று வெற்றிக் குறிக்கோளோடு எதிரில் நிற்பவர் யாராயினும் சுடுசரம் விடுத்து, வீழ்த்தும் படிதான் கண்ணன் தெளிவுபடக் கூறுவதைக் காண்கிறோம். உயர்ந்த நோக்கத்தோடும் அர்ப்பணிப் போடும் குறிக்கோள்களோடும், உலக நன்மை கருதி, சமுதாய நன்மை கருதி தனது கடமைகளைத் தொழிலை இடைவிடாமல் செய்து கொண்டேயிருக்க வேண்டிய இயல்பையே கீதை வற்புறுத்துவதாகக் கொள்ளவேண்டும்.

ஒருவன் தொழில் செய்யும்போது அத்தொழிலில் அவன் தன்னை அர்ப்பணித்து அதன் உடனடிப்பலன்களைப் பற்றி அதிகமாக கவலைப்படாமலும் மகிழ்ச்சியடையாமலும் எந்த விதமான ஊசலாட்டமும் தயக்கங்களும் காட்டாமல் அறிவு