பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்

அ.சீனிவாசன்

11


களும் காப்பியங்களும் எண்ணற்ற இதர பல அறிய நூல்களுமாகும்.

சமுதாய வளர்ச்சியை ஒட்டி புதிய நிலைமைகளுக்கேற்ப, புதிய தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பழைய சாத்திரங்களின் இலக்கியங்களின் தொடர்ச்சியாக புதிய சாத்திரங்கள், புதிய இலக்கியங்கள், புதிய கலைகள், புதிய சித்தாந்தக் கருத்துக்கள் வளர வேண்டும்.

இத்தகைய வழிகாட்டும் நூல்களில் தமிழில் ஐம்பெருங்காப்பியங்களும் இடம் பெறுகின்றன. அவைகளில் இளங்கோவடிகளாரின் சிலப்பதிகாரக் காப்பியம் முதல் இடம் பெறுகிறது. பல சிறந்த கருத்துக்களை அழகுபட மெருகிட்டு நமக்கு வெளிப்படுத்திக்காட்டுகிறது. சிலப்பதிகாரக் காப்பியத்தின் பதிகத்தில்:

“அரசியல் பிழைத் தோர்க்கறங் கூற்றாவதும்
உரைசால் பத்தினிக் குயர்ந்தோரேத்தலும்
ஊழ்வினை உருத்து வந்துடும் என்பதும்
சூழ் வினைச் சிலம்பு காரணமாகச்
சிலப்பதிகாரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுளென
முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியதாக
.....................................................
......................................................
உரைசால் அடிகள் அருள”

என்றும் குறிப்பு காண்கிறோம்.

இந்தக் காப்பியத்தின் மூலம் இளங்கோவடிகளார் மூன்று உண்மைகளை நிலை நிறுத்துகிறார் அத்துடன் பல முக்கிய அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்களையும் குறிப்பிட்டுக் கூறுகிறார். பல நிகழ்ச்சிகளையும் காட்சிகளாகக் காட்டுகிறார்.