பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்திர விழவூ ரெடுத்த காதையில்

30



புகார் நகரில் வாழும் மக்களைப் பற்றி விவரிக்கும் போது பல வேறு தொழில்களைச் செய்யும் தொழில் பிரிவினர்களையும், அறிவுத்துறை மற்றும் ஆட்சித்துறைப் பிரிவினர்களையும், பற்றி இளங்கோவடிகளார் கூறியிருப்பது மிகவும் சிறப்புமிக்கதாகும். பழுது இல்செயல்வினையால் கெழு மாக்களும் எனக் குறிப்பிடுகிறார் குற்றமற்ற பல கைத்தொழில்களைச் செய்யும் பலவேறு பிரிவு மக்கள் என்பது அதன் பொருளாகும்.

"திறமை கொண்ட தீமையற்ற
தொழில் புரிந்த யாவரும்
தேர்ந்த கல்விஞான மெய்தி

வாழ்வம் இந்த நாட்டிலேயே"

என்பது பாரதியின் பாடலாகும்.

"கலம் தரு திருவின் புலம் பெயர் மாக்கள்"

என்றும்

"வண்ணமும் சுண்ணமும் தண்ணறும் சாந்தமும்
பூவும் புகையும் மேவிய விரையும்

பகர்வனர்................................"

என்றும்,

"காழியர், கூவியர், கண்ணொடையாட்டியர்,
மீன் விலைப்பரதவர், வெள்ளுப்புபகருவர்
பாசவர் வாசவர் பன்னிணவிலைஞர்

ஓசுனர்................................."

என்றும்,

"கஞ்சகாரரும் செம்பு செய்குனரும்,
மரங்கொல் தச்சரும் கருங்கைக் கொல்லரும்,
கண்ணுள் வினைஞரும் மண்ணீட்டாளரும்
பொன்செய் கொல்லரும், நன்கலந் தருநரும்

துன்னகாரரும், தோலின் துன்னரும்