பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள் அ.சினிவாசன்

65


முதியமறையோனையும் மற்றவர்களையும் அம்மத யானைத் தாக்குதல் அபாயத்திலிருந்து காப்பாற்றினான் என்பதை

"கடக்களிறடக்கிய கருணை மறவ" என்று காப்பியக்கதை சிறப்பித்துக் கூறுகிறது.

வீட்டிலிருந்த கீரிப்பிள்ளையைக் கொன்று விட்டாள் என்று தனது மனைவியைக் கைவிட்டு ஒரு அந்தணன் காடு சென்று விட்டான். அதனால் பாதிக்கப்பட்ட அந்த அந்தணப் பெண்ணிற்கு அவளுக்கேற்பட்ட துன்பத்தைத் துடைக்க,

"தீத்திறம் புறிந்தோள் செய்துயர் நீங்கத்
தானம் செய்து அவள்தன் துயர் நீக்கிக்
கானம் போன கணவனைக் கூட்டி
ஒல்காச் செல்வத்துறு பொருள் கொடுத்து

நல்வழிப்படுத்த செல்லாக் செல்வ",

என்று கூறும் அளவிற்கு கோவலன் அவர்களுக்கு உதவி செய்து நல்வழிப்படுத்தினாள் என்பதையும் மாடல மறையோன் நினைவுபடுத்திக் கூறுகிறான்.

மற்றொரு சமயம் வறுமையால் துன்படைந்த ஒருவன் பொய்க்கரி கூற, பூதம் அவனைக் கொன்றுவிட, அவனுடைய வயதான தாயும் சுற்றமும் வறுமையில் வாட அவர்களுடைய பசிப்பிணி போக்க கோவலன் உதவுகிறான்.

"அழிதரும் உள்ளத்தவ ளொடும் போந்தவள்
சுற்றத் தோர்க்கும் தொடர்புறு கிளைகட்கும்
பற்றிய கிளைஞரின் பசிப்பணியறுத்துப்

பல்லாண்டு புரந்த இல்லோர் செம்மல்"

என்றும் கோவனுடைய சிறப்பு குணங்களை மாடலன் புகழ்ந்து கூறுகிறார்.