பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள் அ.சினிவாசன்

67



"இன்துணை மகளிர்க்கின்றியமையாக்
கற்புக்கடம் பூண்ட இத்தெய்வ மல்லது
பொற்புடைத் தெய்வம் யாங்கண்டிலமால்
வானம் பொய்யாது, வளம் பிழைப்பறியாது
நீணில வேந்தர் கொள்ளம் சிதையாது
பத்தினிப் பெண்டிர் இருந்த நாடென்னும்

அத்தகு நல்லுரை அறியாயோ நீ"

என்றும்

"தவத்தோர் அடைக்கலம் தான் சிறிதாயினும்

மிகப்பேரின்பம் தருமது கேளாய்"

என்றும்,

"சாரணர் கூறிய தகை சால் நன்மொழி
ஆரணங்காக அறந்தலைப் பட்டோர்
அன்றப்பதியுள் அருந்தவ மாக்களும்
தன்தெறல் வாழ்க்கைச் சாவக மாக்களும்
இட்ட தானத்து எட்டியும்மனைவியும்

முட்டா இன்பத்து முடிவுல கெய்தினர்"

கற்புடைப் பெண்டிர் தெய்வத்திற்கு ஈடானவர்கள், எல்லாவகை ஒழுங்கங்களும் நிறைந்த மக்கள் வாழும் நாட்டில் வானம் பொய்க்காது, வளம் குறையாது அரசியல் கொற்றம் சிதையாது என்றும் அடைக்கலப் பொருளைக் காக்கும் பணி இன்பம் தரத்தக்கது என்றும் அறவாழ்க்கை முழுமையான இன்பமளிக்கும் என்னும் கருத்துக்கள் இன்று சமுதாயத்தின் பொதுக் கருத்தக்களாகியுள்ளன.