பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்ச்சியர் குரவைக் காதையில்

74



குடத்துப்பால் உறையவில்லை. கன்றுகளின் கண்களிலிருந்து நீர் வருகிறது. வெண்ணெய் சரியாக உருகவில்லை . ஆடுகளும் குட்டிகளும் துள்ளி விளையாடாமல் சோர்ந்து கிடக்கின்றன. பசு மாடுகள் காரணமின்றிக் கத்துகின்றன. பசுக்களின் கழுத்து மணிகள் அறுந்து கீழே விழுகின்றன. இந்தத் தீய நிமித்தங்களால் நமக்கு சில தீங்குகள் வரக்கூடும். எனவே கண்ணகியும் காணும் வண்ணம் அவள் முன்னர் ஆயர் பாடியில் எருமன்றத்தின் கண், கண்ணனும் அவனுடைய முன்னோனாகிய பலராமனும் விளையாடிய பால சரித நாடகங்களில் ஒன்றாகிய நப்பின்னையுடன் ஆடிய குரவைக் கூத்தினை பசுக்களும் கன்றுகளும் துன்பம் ஒழியன வென்று நாம் ஆடுவோம் என்று மாதரி தனது மகளை நோக்கிக் கூறுகிறாள்.

குடத்துப் பாலுறையாமையும்
குவியிமிலேற்றின் மடக்
கண்ணீர் சோர்தலும் உறியில்
வெண்ணெய் உருகாமையும்
மறிமுடங்கி யாடாமையும்
மான்மணி நிலத்தற்று
வீழ்தலும் வருவதோர்துன்ப முண்டென
மகளை நோக்கி
மனமயங்காதே மண்ணின்
மாதர்க் கணியாகிய கண்ணகியும்
தான் காண ஆயர்பாடியில்
எருமன்றத்து மாயவனுடன்
தம்முன் ஆடியவால சரிதை நாடகங்ளில்வேல்
நெடுங்கண் பிஞ்ஞை யோடாடிய குரவையாடுதும்
யாம் என்றாள் கறவை கன்று துயர்

நீங்குக வெனவே

என்று காப்பியவரிகள் குறிப்பிடுகின்றன.

குரவைக் கூத்து என்பது ஆயர் மகளிர் கண்ணன், பலராமன், நப்பின்னை வேடங்கள் பூண்ட கூட்டாகக் கூடி ஆடும் கூத்தாகும்.